boAt இந்தியாவில் மிக சிறந்த பவர்புல்லான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம், விலை அம்சங்கள் பற்றி பாருங்க

boAt இந்தியாவில் மிக சிறந்த பவர்புல்லான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம், விலை அம்சங்கள் பற்றி பாருங்க

போட் (boAt) நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்களான போட் ஸ்டார்ம் கால் 4 மற்றும் அல்டிமா வோக் 2 ஆகியவற்றை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. போட் ஸ்டார்ம் கால் 4, 1.96-இன்ச் HD டிஸ்ப்ளேவையும், அல்டிமா வோக் 2, 1.96-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளன, . இந்த ஸ்மார்ட்வாட்ச்களில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகள் (sports modes) இடம்பெற்றுள்ளன மேலும் இதன் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Storm Call 4, boAt Ultima Vogue 2 விலை தகவல்

boAt Storm Call 4-ன் விலை ₹1,599 ஆகவும், boAt Ultima Vogue 2-ன் விலை ₹2,799 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சுகளுக்கான முன்பதிவுகள் மே 29-ஆம் தேதி boAt-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கும், அதே சமயம் அதிகாரப்பூர்வ விற்பனை ஜூன் 12-ஆம் தேதி நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் ரீடைளர் விற்பனைத் தளங்களில் தொடங்கும்.

boAt Storm Call 4 சிறப்பம்சம்

boAt Storm Call 4 , 500 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் கூடிய 1.96-இன்ச் HD ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இந்த வாட்ச் டஸ்ட் , வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் IP68 ரெட்டிம்க் பெற்றுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் புளூடூத் காலிங் மற்றும் அவசரகால SOS சப்போர்ட் ஆகியவை அடங்கும். இந்த வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரை நீடிக்கும். இது நேரடி USB டைப்-C சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் மேற்பட்ட கேமிங் மோட்களை சப்போர்ட் செய்கிறது. ஹெல்த் அம்சங்களில் ஹார்ட் பீட் , SpO2, தூக்கம் மற்றும் மன அழுத்தக் கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இது பெண்களின் நல்வாழ்வு கண்காணிப்பையும் சப்போர்ட் செய்கிறது. ஸ்டார்ம் கால் 4 அன்றாடப் பயன்பாட்டிற்கான ஒரு ஸ்மார்ட்வாட்சாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வழிசெலுத்தலுக்கான ஒரு செயல்பாட்டு கிரீடமும் அடங்கும்.

இதையும் படிங்க 6000mAh பேட்டரியுடன் Lava அதன் புதிய போன் அறிமுகம், இதன் விலை அம்சங்கள் பாருங்க

boAt Ultima Vogue 2 சிறப்பம்சம்.

boAt Ultima Vogue 2, 1000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 1.96-இன்ச் AMOLED ஸ்க்ரீனை கொண்டுள்ளது. மெட்டல் பிரேம் டிசைனை கொண்ட இந்த வாட்ச், நேரடி USB டைப்-சி சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இது தூசி, வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68 ரேட்டிங் பெற்றுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் புளூடூத் காலிங் மற்றும் அவசரகால SOS சப்போர்ட் ஆகியவை அடங்கும். இதன் பேட்டரி 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் மேற்பட்ட கேமிங் மோட்களை கொண்டுள்ளது. ஹெல்த் அம்சங்களில் ஹார்ட் பீட் SpO2, தூக்கம் மற்றும் மன அழுத்தக் கண்காணிப்பு, அத்துடன் பெண்களின் நல்வாழ்வு கண்காணிப்பும் அடங்கும். அல்டிமா வோக் 2, மேம்பட்ட வெளிப்புறத் தெரிவுநிலைக்காக மெட்டல் பிரேம் மற்றும் ஒரு அப்டேட் செய்யப்பட்ட ஸக்ரீனுடன் , மிகவும் பிரீமியம் அழகியலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile