JioPC யில் இருக்கும் சிறப்பு என்ன மற்றும் க்ளவுட் கம்ப்யூட்டிங் நன்மை என்ன?
Jio க்ளவுட் கம்யூட்டிங் (cloud computing )சேவையான JioPC கொண்டு வந்துள்ளது
புதிய கம்ப்யூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்
இந்த சேவையானது Youtube அல்லது ரீல்ஸ் போன்றவற்றை விரும்புவோர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும்
Reliance Jio அதன் சோசியல் மீடியா பிரியர்களுக்காக மிக சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காக க்ளவுட் கம்யூட்டிங் (cloud computing )சேவையான JioPC கொண்டு வந்துள்ளது இதன் மூலம் புதிய கம்ப்யூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த சேவையானது Youtube அல்லது ரீல்ஸ் போன்றவற்றை விரும்புவோர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும். இந்தச் சேவை,கம்ப்யூட்டர் பவர் தேவைப்படுபவர்களுக்காக, தொடக்கத்தில் அதிகத் தொகையைச் செலவிட விரும்பாதவர்களுக்கு ஏற்ற சப்ஸ்க்ரிப்ஷன் திட்டங்களை வழங்குகிறது, மேலும் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
SurveyJioPC என்றால் என்ன, மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் எவ்வாறு செயல்படுகிறது?
கிளவுட் கம்ப்யூட்டிங்கைப் பயன்படுத்த, நீங்கள் கிளவுடில் ஒரு கம்ப்யூட்டரை தேட வேண்டியதில்லை. எளிமையாகச் சொன்னால், இது உங்கள் டிவைஸின் கம்ப்யூட்டர் ப்ரோசெசிங் மற்றும் ஸ்டோரேஜ் நடைபெறுவதற்குப் பதிலாக, இன்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு சர்வரில் நடைபெறுவதை உள்ளடக்கியது. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது பிற சப்போர்ட் செய்யப்பட இருக்கும் டிவைஸிலிருந்து அந்த வெர்சுவல் கம்ப்யூடர் நீங்கள் அணுகி, அதன் அவுட்புட்டை உங்கள் ஸ்க்ரீனில் காணலாம்.
இதன் பொருள், எல்லா கம்ப்யூட்டர் வேலைகளையும் உங்கள் டிவைஸ் யில் செய்ய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், ஒரு நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் செயலில் உள்ள சந்தா ஆகியவை தேவைப்படுகின்றன.
ஒரு சிறிய யூடியூபர் அல்லது இன்ஸ்டாகிராம் கிரியேட்டரால் இதைச் சாத்தியமாக்க முடியுமா?
வீடியோ ஸ்கிரிப்டுகள் எழுதுவது, பிரபலமாகி வரும் தலைப்புகளை ஆராய்வது, சப்டைட்டில்களை உருவாக்குவது,ஈமெயில்களைக் கையாள்வது மற்றும் ஒரு கன்டென்ட் காலெண்டரை உருவாக்குவது போன்ற பணிகள் உங்களிடம் இருந்தால், JioPC பயனுள்ளதாக இருக்கும். இன்ஸ்டாகிராம் பதிவுகள், பேனர்கள் மற்றும் தம்ப்நெயில்களை உருவாக்குவது போன்ற பணிகளுக்கும் ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
ஆனால், இது படமெடுப்பது முதல் வீடியோக்களைத் தொகுப்பது மற்றும் பதிவேற்றுவது வரை அனைத்தையும் தானாகவே எளிதாக்கிவிடும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு நிமிடம் பொறுங்கள். படமெடுக்க கேமரா அல்லது கைபேசி தேவை, தொகுக்க சரியான மென்பொருள் வேண்டும்.
JioPC-யில் டிசைன் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய முடியுமா?
ஆன்லைன் டிசைன் டூல்கள் மற்றும் பிரவுசர் அடிப்படையிலான எடிட்டிங் டூல்களால் சில வேலைகளை கையாள முடியும். இருப்பினும், அதிக அளவுள்ள வீடியோக்களையும், விரிவான எஃபெக்ட்களையும், பெரிய ப்ராஜெக்ட்களையும் எடிட் செய்வதற்கு, அவற்றின் திறன்களைச் சோதித்துப் பார்ப்பது அவசியம். எல்லா சாப்ட்வேரும் செயல்படும் என்பதற்கு எந்த வாரண்டியும் இல்லை.
எனவே, உங்கள் பணி பெரும்பாலும் திரைக்கதை எழுதுதல், ஆராய்ச்சி மற்றும் அடிப்படை வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தால், இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் தினமும் நீண்ட வீடியோக்களைத் தொகுப்பவராக இருந்தால், உங்களுக்குத் தேவையான மென்பொருளின் கிடைக்கும்தன்மை மற்றும் செயல்திறனை முதலில் சரிபார்க்கவும்.
JioPC-யின் விலை என்ன, அதற்கான கட்டணங்கள் என்னவாக இருக்கும்?
ஜியோபிசியின் அடிப்படைத் திட்டம் 4 விர்ச்சுவல் சிபியுக்கள், 8 ஜிபி ரேம் மற்றும் 500 ஜிபி சேமிப்பகத்தை வழங்குகிறது. இதன் 2 மாதக் கட்டணம் ₹1,000 ஆகும். ஜியோபிசி அல்ட்ரா திட்டம் 8 விர்ச்சுவல் சிபியுக்கள், 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டாரே வழங்குகிறது. இதன் 2 மாதக் கட்டணம் ₹1,200 ஆகும்.
இந்த ரேம் மற்றும் ஸ்டோரேஜ் உங்கள் லேப்டாப்பிற்கானது அல்ல, கிளவுட் கம்யூட்டர்கானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், இணையக் கட்டணங்களும் சந்தாவுடன் சேர்க்கப்படும். எனவே, ஒரு திட்டத்தை வாங்குவதற்கு முன், உங்கள் வேலையில் எவ்வளவு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தேவை என்பதைக் கணக்கிடுவது அவசியம்.
கன்டென்ட் உருவாக்குநர்கள் JioPC-ஐத் தேர்ந்தெடுக்கலாமா ?
நீங்கள் இத்துறையில் புதிதாக நுழைந்து, உங்கள் வேலை பெரும்பாலும் எழுதுதல், ஆராய்ச்சி செய்தல், ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் ஆன்லைனில் டிசைன் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தால், JioPC சரியான தேர்வாக இருக்கலாம். ஆனால், உங்கள் முழு வேலையும் அதிகளவிலான வீடியோ எடிட்டிங்கைச் சுற்றியே இருந்தால், முதலில் சோதித்துப் பார்க்காமல் சந்தாவை வாங்குவது ஒரு புத்திசாலித்தனமான முடிவு அல்ல.
இதையும் படிங்க பக்கா மாஸ் காட்டும் BSNL வெறும் ரூ.202 யில் மொத்தம் 32 நாள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங், டேட்டா பல
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு படைப்பாளியாக ஆவதற்கு விலையுயர்ந்த உபகரணங்கள் மட்டுமே எல்லாம் அல்ல, ஆனால் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். ஒரு ஜியோபிசி உங்கள் வேலையை எளிதாக்குமா இல்லையா என்பது, அதனிடமிருந்து நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எனவே, ஒரு திட்டத்தை வாங்குவதற்கு முன், உங்கள் பணிச்சுமை மற்றும் உங்கள் பட்ஜெட் ஆகிய இரண்டையும் கருத்தில் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
