நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

HIGHLIGHTS

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் சகோதரர் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் விருமன்.

கொம்பன் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விருமன் திரைப்படத்தின் டிரைலரையும் பட குழுவினர் வெளியிட்டனர்.

நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரின் சகோதரர் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் விருமன்.  கொம்பன் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்களை வெளியிட்டதுடன். அதே நிகழ்ச்சியில் விருமன் திரைப்படத்தின் டிரைலரையும் பட குழுவினர் வெளியிட்டனர்.

முத்தையாவின் முந்தைய திரைப்படங்கள் போல இந்தப் படமும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் அதிரடி ஆக்சன் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் டிரைலரில் காட்சிகள் உள்ளன.

இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகர்கள் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

https://twitter.com/Karthi_Offl/status/1554846316391325696?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :