மகாபலிபுரத்தில் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன்

HIGHLIGHTS

விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்

நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று காலை நடைபெற்றது

இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து தன் மனதில் தோன்றுவதை பதிவிட்டிருந்தார்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஓட்டல் ரிசார்ட்டில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நயன்தாராவை 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பு இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து தன் மனதில் தோன்றுவதை பதிவிட்டிருந்தார்.

அதில் ‘கடவுளுக்கு நன்றி! ஒவ்வொரு நல்ல உள்ளமும், ஒவ்வொரு நல்ல தருணமும், ஒவ்வொரு நல்ல தற்செயல் நிகழ்வும், ஒவ்வொரு நல்ல ஆசீர்வாதமும்,படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், வாழ்க்கையை அழகாக்கிய ஒவ்வொரு பிரார்த்தனையும் ! நல்ல வெளிப்பாடுகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்!தற்போது இவை அனைத்தையும் நயன்தாராவுக்கு சமர்ப்பிக்கிறேன்.என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை தொடங்கவும் ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், திருமணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் செய்யப்பட்டிருந்தன. அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருமணம் நடைபெற்ற தனியார் ரிசார்ட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகம் செய்யப்பட்டிருந்தது.

 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :