வீட்ல விசேஷம் படத்தின் OTT வெளியீடு அறிவிப்பு.

HIGHLIGHTS

ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 17-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே. படத்தின் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாதம் 17-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையொட்டி படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் ஆர்.ஜே. பாலாஜி தீவிரமாக ஈடுபட்டார்.

இதன் காரணமாக படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட நிலையில், படம் வெளியாகி குடும்ப ரசிகர்களின் விருப்பத்தை பெற்றது.

திருமணம் முடித்த மகன் ஆர்.ஜே. பாலாஜி இருக்கும்போது அவரது தாயார் கர்ப்பமடைகிறார். இது மகன்களுக்கு அதிப்ருப்தியை அளிக்கிறது. இவ்வாறான கதைக் களத்தில் பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் கலகப்பாக படம் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் ஆர்.ஜே. பாலாஜியின் அப்பாவாக, ஊர்வசியின் கணவராக சத்யராஜ் நடித்திருப்பார்.

2018-ல் பதாய் ஹோ என்ற திரைப்படம் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரீமேக் தான் இந்த வீட்ல விசேஷம். இந்த நிலையில் வீட்ல விசேஷம் படம் ஜீ5 ஓடிடி தளத்தில இம்மாதம் 15-ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :