வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது 'பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
https://twitter.com/itisprashanth/status/1493856875544150018?ref_src=twsrc%5Etfw
இந்நிலையில் வலிமை படத்தின் கதை இதுதான் என பிரிட்டிஷ் அரசின் சென்சார் போர்டு அறிவித்துள்ளது. சென்சார் போர்டு மூலம் (BBFC) நீக்கப்பட்ட காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் கதை என்னவென்றால் பெரிய அளவிலான போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கிரிமினல் பைக்கர் கும்பலை தமிழக போலீசார் எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை பற்றியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
OTT யில் இந்த திரைப்படம் மார்ச் 2022 அறிமுகமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.ஆனால் தற்பொழுது OTT வெளியிட்டு தேதி அறிவிக்கப்படவில்லை