வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது.
இந்த படத்தின் வலிமை இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல இந்தியா திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது 'பே வியூ ப்ரொஜெக்ட்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தற்பொழுது ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடைப்போடுகிறது.
இந்தப் படம் விரைவில் OTT-ல் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்த கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.அனைத்து மொழி உரிமைகளையும் சேர்த்து ஜீ நிறுவனம் ரூபாய் 65 கோடிக்குமேல் கொடுத்து வலிமையை கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படம் 4 வாரங்கள் கழித்து ஜீ5 தளத்தில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மார்ச் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.