பெருந்தொற்று காலம் இன்டர்நெட் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. எனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மலிவு மற்றும் வரம்பற்ற வைஃபை டேட்டா பிளான்களை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் வீட்டிற்கான சிறந்த அன்லிமிட்டெட் வைஃபை பிளான்களை வழங்குகின்றன். நீங்கள் வீட்டு பயன்பாட்டிற்கான அன்லிமிட்டெட் வைஃபை ஸ்கீம்களை தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான தகவல்களை இங்கே பார்க்கலாம்..
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ ஃபைபர் வைஃபை பிளானில் ரூ.699 பிராட்பேண்ட் திட்டம் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் மற்றும் 100 Mbps அன்லிமிட்டெட் டேட்டாவுடன் வருகிறது. ஜியோ ஃபைபரின் ரூ.999 பிளான் கூடுதலாக Netflix, Prime Video மற்றும் Disney+ Hotstar உள்ளிட்ட 12 OTT சப்ஸ்கிரிப்ஷன் பிளாட்ஃபார்ம்ஸுடன் வருகிறது.ரூ.1499 பிளான் 300 Mbps டவுன்லோட் மற்றும் அப்லோட் ஸ்பீடுடன் அன்லிமிட்டெட் டேட்டாவை வழங்குகிறது.
வீடுகளுக்கு ரூ.299 என்ற மலிவு விலையில் மிகவும் சிக்கனமான வைஃபை திட்டங்களை வழங்குகிறது BSNL . இந்த பிளானில் 100 ஜிபி வரை 10 எம்பிபிஎஸ் வேகமும், 100 ஜிபிக்கு மேல் 2 எம்பிபிஎஸ் வேகமும் இருக்கும். அதே போல ரூ.1299 திட்டமானது BSNL வழங்கும் பிரைமரி பிராட்பேண்ட் திட்டமாகும். இது 1600 ஜிபி வரை 10 எம்பிபிஎஸ் வேகத்தையும் அதற்கு மேல் 5 எம்பிபிஎஸ் வேகத்தையும் வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்ஸ்களை வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரின் இந்த நிலையான பிராட்பேண்ட் பிளான் 100 Mbps வேகத்தில் டேட்டாவிற்கு அன்லிமிட்டெட் அக்சஸை வழங்குகிறது. இந்த பிளானில் 24×7 வாடிக்கையாளர் சேவை, வைஃபை காலிங், ப்ரோ ஆக்டிவ் நெட்வொர்க் மானிட்டரிங் , ஆட்டோ ட்ரபிள்ஷூட்டிங் ரவுட்டர்கள் மற்றும் பல கூடுதல் பலன்கள் வழங்கப்படுகின்றன.
50 Mbps வேகம் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டாவுடன் 3 மாதங்களுக்கான விலை ரூ.2097 என்ற பிளானை டாடா ப்ளே ஃபைபர் அறிமுகப்படுத்தியுள்ளது. 50 Mbps திட்டம் 6 முதல் 12 மாத ரென்டலுக்கு ரூ.3300 மற்றும் ரூ.6000 என்ற விலையில் கிடைக்கிறது. தவிர 1 மாதத்திற்கு ரூ.3600 கட்டணத்தில் 1Gbps என்ற ஹைஸ்பீட் பிளானும் உள்ளது. ஃப்ரீ இன்ஸ்டாலேஷன் மற்றும் ஃப்ரீ ரவுட்டர் டூயல்-பேண்ட் ONT மற்றும் வைஃபை ரவுட்டரை டாடா வழங்குகிறது.
1 மாத பிளான்களுக்கு பதில் பல மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கான பணம் செலுத்தினால் ACT பிராட்பேண்ட் சில அற்புதமான பலன்களை வழங்குகிறது. ரூ.6588 செலுத்தினால் 50 Mbps வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டாவை பெறலாம். ACT-ன் சில்வர், பிளாட்டினம் மற்றும் டயமண்ட் ப்ரோமோ போன்ற பிற பிளான்கள் அன்லிமிட்டெட் டேட்டாவுடன் 150 முதல் 300 Mbps வரை வேகத்தை வழங்குகின்றன.