75 இன்ச் சைஸ் வரையிலான QD Mini LED TV அறிமுகம் செய்த, Xiaomi இதை முன்குட்டியே புக்கிங் செய்வோருக்கு ரூ,10,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Xiaomi இந்தியாவில் அதன் புதிய Xiaomi S Mini LED TV அறிமுகம் செய்தது,

இந்த சீரிஸின் கீழ் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்க்ரீன் ஆகிய மூன்று சைஸ்களில் வருகிறது,

இந்த டிவியில் Dolby Vision, HDR10+,சப்போர்ட் மற்றும் சியோமியின் இந்த டிவியில் பிலிம்மேக்கர் மோட் வழங்கப்படுகிறது

75 இன்ச் சைஸ் வரையிலான QD Mini LED TV அறிமுகம் செய்த, Xiaomi இதை முன்குட்டியே புக்கிங் செய்வோருக்கு ரூ,10,000 டிஸ்கவுண்ட்

Xiaomi இந்தியாவில் அதன் புதிய Xiaomi S Mini LED TV அறிமுகம் செய்தது, இந்த சீரிஸின் கீழ் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஸ்க்ரீன் ஆகிய மூன்று சைஸ்களில் வருகிறது, மேலும் இந்த டிவியில் Dolby Vision, HDR10+,சப்போர்ட் மற்றும் சியோமியின் இந்த டிவியில் பிலிம்மேக்கர் மோட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் இருக்கும் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi TV S Mini LED Series (2026) விலை மற்றும் விற்பனை தகவல்.

Xiaomi TV S Mini LED TV சீரிஸின் அதன் அடிபடையின் 55இன்ச் யின் ஆரம்ப விலை ரூ, 51,999 ஆக இருக்கிறது, மேலும் அதன் 65-இன்ச் வேரியன்ட் விலை ரூ,71,999 ஆக இருக்கிறது மற்றும் இதன் 75-இன்ச் கொண்ட ஹை எண்டு வேரியண்டின் விலை ரூ, 99,999 யில் வருகிறது மேலும் இந்த புதிய சீரிஸ் இந்தியாவில் முன்பதிவுக்கு வருகிறது மற்றும் இந்த டிவி ஏப்ரல் 22 Mi.com மற்றும் இந்த டிவி இ-காமர்ஸ் தளமான amazon மற்றும் பல ரீடைளர் கடைகளில் வாங்கலாம்.

ரூ. 3,000 வரையிலான வங்கிச் சலுகையுடன், 55-அங்குல சியோமி டிவி எஸ் மினி LED ஸ்மார்ட் டிவி ரூ. 48,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும். 65-இன்ச் மாடலுக்கு ரூ. 5,000 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும், அதன் பிறகு இதன் விலையை ரூ. 66,999 ஆகக் குறைக்கும். ரூ. 10,000 வரையிலான பேங்க் சலுகையைப் பயன்படுத்தி 75-இன்ச் மாடலை ரூ. 89,999-க்கு வாங்கலாம்.

முன்பதிவுக் காலத்தில், சியோமி நிறுவனம் ரூ. 10,000 வரையிலான பேங்க் பலன்களையும், இரண்டு வருட நீட்டிக்கப்பட்ட வாராண்டி வழங்குகிறது. இதன் மூலம் முழுமையான உத்தரவாதக் காலம் நான்கு ஆண்டுகளாகிறது. 12 மாதங்கள் வரை நோ கோஸ்ட் EMI விருப்பங்களும் கிடைக்கின்றன.

Xiaomi TV S Mini LED Series (2026) சிறப்பம்சம்.

இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் 55-இன்ச் , 65-இன்ச் மற்றும் 75-அங்குல காட்சித் தேர்வுகளில் கிடைக்கும் சியோமி டிவி எஸ் மினி LED சீரிஸ் (2026), 4K (2,160×3840 பிக்சல்கள்) ரேசளுசன் வழங்குகிறது. இந்தத் சீரிஸின் 178-டிகிரி வியூவ் என்கில் , 60Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் DLG 120Hz ஆகியவற்றைக் கொண்டுள்ளது. QD-மினி LED பேனல்கள் 94 சதவீத DCI-P3 கலர் லிமிட்டை கொண்டுள்ளன, மேலும் குறைந்தபட்சம் 510 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் , அதிகபட்சமாக 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த டிவியில் பல லைட் டிம்மிங் ஜோன் செய்யும் , ஒரு லைட் சென்சார் மற்றும் ஒரு டைனமிக் பேக்லைட் ஆகியவை உள்ளன. இது அப்டேட் செய்யப்பட்ட தெளிவுக்காக விவிட் பிக்சர் என்ஜின் 2-ஐப் பயன்படுத்துகிறது. இந்தத் சீரிஸின் கீழ் , Dolby Audio, DTS:X, DTS Virtual:X மற்றும் சியோமி சவுண்ட் ஆகியவற்றுக்கான சப்போர்ட் , இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு ஃபுல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் உட்பட, குவாட் 34W ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது.

இதையும் படிங்க Doby Atmos சப்போர்ட் கொண்ட 65-மற்றும் 75 கொண்டTV வெறும் ரூ,41049 யில் தியேட்டர் போன்ற அனுபவம்

கனெக்ஷன் வசதிக்காக, Xiaomi TV S Mini LED டிவிசீரிஸ் (2026) டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத்தை உள்ளடக்கியுள்ளது. இதில் குவாட்-கோர் A55 CPU, மாலி-ஜி52 ஜிபியு, 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளன. இந்த சீரிஸ், சியோமியின் சமீபத்திய பேட்ச்வால் இண்டர்பேசில் இயங்குகிறது. இதில் பேட்ச்வால்+, இலவச லைவ் டிவி சேனல்கள் மற்றும் பெற்றோர் கண்ட்ரோலுடன் கூடிய கிட்ஸ் மோடு போன்ற அம்சங்கள் அடங்கும்.

Xiaomi TV S Mini LED சீரிஸ் (2026)ஏர்பிளே 2, கூகுள் காஸ்ட் மற்றும் மிராகாஸ்ட் ஆகியவற்றை வழங்குகிறது. இதில் இன் பில்ட் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்டும் அடங்கும். இந்த டிவி வரிசையில் மூன்று HDMI போர்ட்கள் (ஒன்று eARC உடன்), இரண்டு USB 2.0 போர்ட்கள், ஈதர்நெட், AV உள்ளீடு, இயர்போன் ஜாக், ஆன்டெனா இன்புட் மற்றும் ஒரு ஆப்டிகல் போர்ட் ஆகியவை உள்ளன.

கேமிங் மற்றும் அதிக பிரேம்-ரேட் உள்ளடக்கத்திற்காக, சியோமி டிவி எஸ் மினி எல்இடி சீரிஸ் (2026) மாடலில் DLG 120Hz, MEMC மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோடு (ALLM) ஆகியவை உள்ளன. இதில் ஃபிலிம்மேக்கர் மோடும் அடங்கும். ஸ்டாண்ட் இல்லாமல், 75-இன்ச் மாடலின் அளவு 1,667x83x950mm ஆகவும், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களின் அளவு முறையே 1,445x81x832mm மற்றும் 1,226x77x709mm ஆகவும் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo