சோனி பிரேவியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது

சோனி பிரேவியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் வெளியானது
HIGHLIGHTS

சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சோனியின் புதிய X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த டிவி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய சோனி டிவி மாடல்களில் X1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் கொண்டிருக்கிறது. இவற்றில் ஸ்டிரைக்கிங் ஹைலைட்கள், டீப்பர் டார்க் மற்றும் வைப்ரன்ட் கலர்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர், சூப்பர்பிட் மேப்பிங் 4K ஹெச்டிஆர் மற்றும் டூயல் டேட்டாபேஸ் பிராசஸிங் கொண்டுள்ளது. 

ஆன்ட்ராய்டு டிவி வெர்ஷன் 7.0 மற்றும் சோனியின் பிரத்யேக யூசர் இன்டர்ஃபேஸ் (UI) மற்றும் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் வசதியை வழங்குகிறது. இதன் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை மிகவும் கச்சிதமாக பிரதிபலிக்கிறது. X டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் PRO ஹெச்டிஆர் மற்றும் ஹெச்டிஆர் அல்லாத தரவுகளை தனியே வித்தியாசப்படுத்தி, பின்னணி நிறங்களை தானாக மாற்றியமைத்து XDR கான்ட்ராஸ்ட் தரத்தில் வீடியோக்களை வழங்குகிறது.

சோனியின் டைரக்ட் எல்இடி லோக்கல் டிம்மிங் மற்றும் பேக்லைட் பூஸ்டிங் அல்காரிதம் கொண்டு X-மோஷன் கிளேரிட்டி அம்சம் வேகமான ஆக்ஷன் படங்களை மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துகிறது. இதனால் புகைப்படங்கள் அதிக தரம் பெறுவதோடு பிரைட்னஸ் அளவில் எவ்வித இழப்பும் ஏற்படாது.

சோனி பிரேவியா X9000F சிறப்பம்சங்கள்:

– 55/65/85-இன்ச் 3840×2160 பிக்சல் 4K HDR TRILUMINOS டிஸ்ப்ளே
– X-மோஷன் கிளேரிட்டி
– 4K ஹெச்டிஆர் பிராசஸர் X1 எக்ஸ்ட்ரீம்
– டைனமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர்
– ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர்
– X-டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் ப்ரோ
– 4K X-ரியாலிட்டி ப்ரோ
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு டிவி 7.0
– க்ரோகாஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பில்ட் இன் வசதி
– வாய்ஸ் சர்ச் வசதி
– வைபை, ப்ளூடூத், யுஎஸ்பிx3, 1xஈத்தர்நெட்
– 10 W+10 W ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல்
– டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி பல்ஸ்
– டிடிஎஸ் டிஜிட்டல் சரவுன்ட்

55 இன்ச் சோனி பிரேவியா X9000F (KD-55X9000F) விலை ரூ.2,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே விற்பனை நடைபெற்று வருகிறது. இதன் 65 இன்ச் (KD-65X9000F) மற்றும் 85-இன்ச் (KD-85X9000F) மாடல்களின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது. இவற்றின் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo