32 இன்ச் கொண்ட ஸ்மார்ட் LED டிவி வெறும் ரூ. 7999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது Shinco

32 இன்ச் கொண்ட ஸ்மார்ட் LED டிவி வெறும் ரூ. 7999 விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது Shinco

நொய்டாவை சேர்ந்த டி.வி. மேனிபெக்ஜரர் ஷின்கோ குறைந்த விலையில் புதிதாக 32-இன்ச் ஸ்மார்ட் LED  டி.வி.யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி.வி.யில் யுனிவால் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த யு.ஐ. கிளவுட் டி.வி. சான்று பெற்ற AOSP மூலம் இயங்குகிறது.

Shinco 32-இன்ச் ஸ்மார்ட் LED . டி.வி. 

இத்துடன் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், சன் நெக்ஸ்ட், ஜியோ சினிமா, இரோஸ் நௌ, ஹங்காமா பிளே, ஆல்ட் பாலாஜி, மூவி பாக்ஸ், புளூம்பெர்க் குவின்ட், தி குவின்ட், ஹோம்வேதா போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. 

கனெக்டிவிட்டிக்கு இரண்டு HDMI  போர்ட்கள், இரு USB ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை சார்ந்து இயங்குகிறது. இதில் உள்ள இ-ஷேர் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டாக்களை டி.வி.யில் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ஏ பிளஸ் கிரேடு பேனல் 1366×768 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இந்த பேனலில் 1.67 கோடி நிறங்களை HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு டி.வி. குவாட் கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை 
அமேசான் இந்தியாவுடன் இணைந்து வெளியாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி. செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனை நடைபெற இருக்கிறது. புதிய ஸ்மார்ட் LED. டி.வி. மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo