Sanyo வின் 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட் டி.வி. ரூ.12,999யில் அறிமுகம்.

Sanyo வின் 32 இன்ச் கொண்ட ஸ்மார்ட் டி.வி. ரூ.12,999யில் அறிமுகம்.
HIGHLIGHTS

இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.12,999 என்றும் 43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சான்யோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் LED . டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. அளவுகளில் கிடைக்கின்றன.

சான்யோவின் புதிய நெபுளா சீரிஸ் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் யூடியூப், நெட்ஃபிளிக்ஸ், ஆண்ட்ராய்டு மிரரிங், IPS . டிஸ்ப்ளே போன்று ல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ஃபாஸ்ட் காஸ்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களது மொபைலில் இருக்கும் தரவுகளையும் டி.வி.யில் பார்த்து ரசிக்கலாம்.

புதிய சான்யோ ஸ்மார்ட் டி.வி.க்கள் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இந்தியாவில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. விலை ரூ.12,999 என்றும் 43 இன்ச் டி.வி. விலை ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் வழங்கப்படுகின்றன. 32 இன்ச் டி.வி.யில் 1366×768 பிக்சல் கொண்ட HD. பேனல் வழங்கப்பட்டுள்ளது. 43 இன்ச் டி.வி.யில் 1920×1080 பிக்சல் ஃபுல் HD. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

சான்யோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் சியோமி, தாம்சன் மற்றும் ஜெ.வி.சி. உள்ளிட்ட பிராண்டுகளுக்கு போட்டியாக அமையும். சமீபத்தில் JVC இந்தியாவில் ஆறு புதிய ஸ்மார்ட் LED. டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ.11,999 முதல் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo