உலகின் முதல் ‘LED . ஃபார் ஹோம்’ ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

HIGHLIGHTS

ஆக்டிவ் LED என்றும் அழைக்கக் கூடிய ஸ்கிரீன் வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் LED. ஆகும்.

உலகின் முதல் ‘LED . ஃபார் ஹோம்’ ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

உலகின் முதல் LED . ஃபார் ஹோம்' ஸ்கிரீனை சாம்சங் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. ஆக்டிவ் LED என்றும் அழைக்கக் கூடிய ஸ்கிரீன் வீட்டு பயன்பாடுகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முதல் LED. ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வீட்டினுள் பொழுதுபோக்கு இடைவெளியை ஆக்கிரமிக்கும் என எதிர்பார்க்கப்பட்டும் இந்த எல்.இ.டி. வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும்.

சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கும், தலைசிறந்த ஆடியோ மற்றும் வீடியோ டேட்டாக்களை சூப்பர் பிரீமியம் ஸ்க்ரீனில் பார்க்க விரும்புவோரை குறிவைத்து புதிய LED. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்க்ரீனால் மிகவும் நுணுக்கமான வீடியோ தரத்தை துல்லியமாக வழங்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது. 

மெல்லிய டிசைனில் மாட்யூலர் ஃபார்மேஷன் தொழில்நுட்பம் மூலம் பொருத்தக்கூடிய வகையில், பயனர்கள் விரும்பும் படி ஸ்கிரீன் அளவை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர் விரும்பும் படி ஸ்க்ரீனை எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.

HDR.பிக்சர் ரிஃபைன்மென்ட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் ஸ்க்ரீனில் வீடியோ பார்க்க நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் கிடைக்கும் என்றும் டிஸ்பிலேக்கள் மிகத்துல்லியமாக தெரியும். ஸ்க்ரீனை சுற்றி நிலவும் வெளிச்சங்களால் டிபிளேவில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸ்-இல் 110-இன்ச் FHD, 130-இன்ச் FHD, 220-இன்ச் UHD மற்றும் 260-இன்ச் UHD அளவுகளில் கிடைக்கிறது. இந்த திரை 1,00,000-க்கும் அதிக மணி நேரங்கள் உழைக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் 'எல்.இ.டி. ஃபார் ஹோம்' ஸ்கிரீன் அளவுகளுக்கு ஏற்ப விலை ரூ.1 கோடியில் துவங்கி அதிகபட்சம் ரூ.3.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo