இன்டர்நெட்டில் லீக் ஆனா Realme ஸ்மார்ட் டிவி தகவல்..

இன்டர்நெட்டில் லீக் ஆனா Realme ஸ்மார்ட் டிவி தகவல்..

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் முன்னணி பிராண்டாக உருவெடுத்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ரியல்மி பிராண்டு ஆடியோ சாதனங்கள் மற்றும் அக்சஸரீக்களை அறிமுகம் செய்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் ரியல்மி பிராண்டு தொலைகாட்சி சந்தையில் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு அளவுகளில் ரியல்மி டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது புதிய ரியல்மி டிவி 43 இன்ச் அளவில் உருவாகி வருவதை உறுதி செய்து இருக்கிறது. இதே மாடல் நம்பர் JSC55LSQL பெயரில் உருவாகியிருக்கிறது. இந்த 55 இன்ச் டிவி புதிய ரியல்மி டிவி சீரிஸ் டாப் எண்ட் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.இந்திய தரத்திற்கான சான்றளிக்கும் பி.ஐ.எஸ். தளத்தில் ரியல்மி டிவி43 பெயரில் எல்இடி டிவி ஒன்று சான்று பெற்று இருக்கிறது. 

புதிய டிவி சீரிஸ் இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை தவிர, புதிய டிவி மாடல் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. தற்சமயம், நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்த காலக்கெடுவில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இது தள்ளிவைக்கப்பட்டது.இருப்பினும் , இந்த ஆண்டிற்குள் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது

ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில் அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.  இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo