Xiaomi யின் 70-இன்ச் கொண்ட 4K HD டிவி விரைவில் அறிமுகம் .

Xiaomi யின் 70-இன்ச் கொண்ட 4K HD டிவி  விரைவில் அறிமுகம் .

சியோமி நிறுவனம் சமீபத்தில் சீனாவில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. சியோமி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி.,  'ரெட்மி டி.வி  70-இன்ச்' எனப் பெயரிடப்பட்டது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

ரெட்மி டி.வி. மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டி.வி. செப்டம்பர் 3-ல் இருந்து ரூ.38,000 விலையில் விற்பனை ஆகி வருகிறது.

 இந்த டி.வியின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படாமல் இருந்த நிலையில்,  சியோமியின் அதிகாரப்பூர்வ இந்திய ட்விட்டர் அக்கவுண்டில் டி.வி. தோன்றுவதைக் காட்டும் டீசரைப் பகிர்ந்துள்ளது.

மேலும் செப்டம்பர் 17 ஆம் தேதி 'ஸ்மார்ட்டர் லிவிங் 2020' வெளியீட்டு தேதியை முக்கியமாக குறிப்பிட்டுள்ளது. சியோமி இன்னும் இந்த புதிய தயாரிப்பின் பெயரை வெளியிடவில்லை.

அந்த டீசரில் காட்டப்படும் படம், மெல்லிய பெசல்களைக் கொண்ட டி.வி, ரெட்மி 70-யாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த கணக்கின் மற்றொரு ட்வீட்டில், இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo