இனி நீங்க டிவி பாத்துட்டு சுருட்டி வைத்து கொள்ளலாம்

இனி நீங்க டிவி  பாத்துட்டு  சுருட்டி வைத்து கொள்ளலாம்
HIGHLIGHTS

சுருட்டி வைத்து கொள்ளும் அளவில் டிவியை LG நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

 LG  நிறுவனம் ஒரு பெரிய ஸ்க்ரீன் காந்த புதிய டி.வி. மாடல்களை அடுத்த ஆண்டு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது., இதனுடன்  இவ்ந்த டிவியை நீங்கள்  பாயை போல சுருட்டி வைத்துக்  கொள்ளலாம்  என கூறப்படுகிறது. 

இந்த புதிய டி.வி. மாடலில் 65 இன்ச் அளவில் சுருட்டக்கூடிய ஸ்க்ரீன் கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்க்ரீன் கீழ் இருந்து மேலே எழும்பும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி.யில் OLED ஸ்கிரீன்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், படங்கள் அதிக பிரகாசமாக தெரியும் என்றும் இவை வழக்கமான LCD . ஸ்கிரீன்களை விட எளிமையாக மடிக்க முடியும் 

LG  நிறுவனத்தின் இந்த சுருட்டக்கூடிய  டிவி மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்ப்பி பெரும்  என எதிர்பார்க்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியின் ஆர்வம் நல்ல விற்பனை செய்வதற்கு ஊக்கத்தை அளிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இது சீன நிறுவங்களுடனான போட்டியை எதிர்கொள்ளவும் உதவும் என கூறப்படுகிறது. தென்கொரிய நிறுவனமான   எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது.

சீயோல் நகரில் உள்ளLG . ஆராய்ச்சி சென்டரில் சுருட்டக்கூடிய இந்த டி.வி.யின் ப்ரோடோடைப் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த டி.வி. பயன்படுத்தாத போது, பெட்டியில் சுருட்டி வைத்துக் கொள்ளும் வசதியை பயனர்களுக்கு வழங்குகிறது.

சமீபத்தில் வெளியான தகவல்களின் படி டிவி சந்தையில் OLED ரேஷியோ பேனல்களை கொண்ட டி.வி. மாடல்கள் வெறும் 1.1 சதவிகிதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது என தெரியவந்துள்ளது. LCD . ரக டி.வி.க்கள் சந்தையில் 98 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. எனினும் அடுத்த ஆண்டு வாக்கில் OLED  டி.வி. மாடல்களின் விநியோகம் 70 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது .

LG  தனது சுருட்டக் கூடிய டி.வி. மாடல்களை ஏற்கனவே அறிமுகம் செய்தது. எனினும், 2019 வாக்கில் வர்த்தக ரீதியில் இந்த டி.வி. மாடல்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இது குறித்து எல்.ஜி. சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo