Kodak புதிய QLED TV, Dolby Atmos சப்போர்டுடன் பல அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகம்

HIGHLIGHTS

Kodak அதன் புதிய எடிஷன் Kodak Matrix QLED TV இந்தியாவில் அறிமுகம்

இது 43, 50, 55, மற்றும் 65 இன்ச் சைஸ் வரையில் வருகிறது.

இது bezel-less உடன் இதில் மெட்டாலிக் பினிஷ் மற்றும் இது Google TV யில் இயங்குகிறது

Kodak புதிய QLED TV, Dolby Atmos சப்போர்டுடன் பல அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகம்

Kodak அதன் புதிய எடிஷன் Kodak Matrix QLED TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இது 43, 50, 55, மற்றும் 65 இன்ச் சைஸ் வரையில் வருகிறது. இந்த டிவியில் இருக்கும் மிக சிறந்த அம்சம் 4K QLED பேணல் உடன் வருவது ஆகும், இதனுடன் இதில் HDR10+ வைட் கலர் கெமட் மற்றும் 550நிட்ஸ் வரையிலான ப்ரைட்னாஸ் வழங்குகிறது மேலும் இது bezel-less உடன் இதில் மெட்டாலிக் பினிஷ் மற்றும் இது Google TVயில் இயங்குகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Kodak Matrix QLED TV யின் சிறப்பம்சம்.

Kodak யின் இந்த Matrix QLED TV இந்தியாவில் 43, 50, 55, மற்றும் 65-இன்ச் சைஸ்களில் வருகிறது, மேலும் இது 4K QLED பேணல் உடன் HDR10+சப்போர்ட் கொண்ட பெஸல்-லெஸ் டிவி ஆகும் மேலும் இது மெட்டாலிக் பினிஷ் உடன் பார்க்க பிரீமியமாக இருக்கும்

இந்த டிவிகள் கூகிள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் மற்றும் ஏர்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் 10,000 க்கும் மேற்பட்ட ஆப்கள் மற்றும் 500,000 நிகழ்ச்சிகளுக்கான அக்சஸ் கிடைக்கிறது. முன்பே ஏற்றப்பட்ட ஆப்களில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், Sony LIV, ஜீ5 மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஆகியவை அடங்கும். ரிமோட் வொயிஸ் சர்ச் மற்றும் விரைவான அக்சஸ்க்காக பிரத்யேக OTT Keys வருகிறது.

65-இன்ச் மாடல் AiPQ சிப்செட் மூலம் Mali-G52 GPU உடன் இயக்கப்படுகிறது. இதில் 60Hz இல் AI ஸ்மூத் மோஷன் மற்றும் பல படம் மற்றும் சவுண்ட் மோட்கள் உள்ளன. 60W அவுட்புட் கொண்ட நான்கு ஸ்பீக்கர்கள் மூலம் ஆடியோ வழங்கப்படுகிறது, மற்ற மாடல்கள் 50W ஐ வழங்குகின்றன. அனைத்து டிவிகளும் Dolby Atmos, Dolby Digital Plus மற்றும் DTS TruSurround ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .

செயல்திறன் 2GB RAM மற்றும் 16GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட குவாட்-கோர் ப்ரோசெசர் கையாளப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் ARC மற்றும் CEC உடன் மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஆப்டிகல் வெளியீடு, புளூடூத் 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவை அடங்கும். இந்தத் சீரிஸ் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

இதையும் படிங்க:BBD Sale: ப்ளிப்கார்ட் ஸ்பெஷல் ஆபர் Infinix 43 இன்ச் கொண்ட QLED TV வெறும் ரூ,12,199 யில்

விலை மற்றும் விற்பனை

Kodak Matrix QLED TV யின் விலையை பற்றி பேசினால், இதன் 43 இன்ச் மாடல் விலை ரூ,18,799 ஆகும், அதன் 50-இன்ச் டிவியின் விலை 23,999ரூபாய், 55இன்ச் மாடல் விலை ரூ,27,649 மற்றும் இதன் 65 இன்ச் சைஸ் விலை ரூ,37,999 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் amazon Great Indian Festival மற்றும் Flipkart Big Billion Days sales, மிக சிறந்த டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதாவது இதை Axis Bankகார்டிலிருந்து வாங்கினால் 10 சதவிகிதம் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, ICICI பேங்க் no-cost EMI. கீழ் அமேசானில் வாங்கலாம் இதை தவிர SBI பேங்கிலிருந்து வாங்கினால் 10சதவிதம் டிஸ்கவுண்ட் பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo