Haier யின் புதிய 100-இன்ச் சைஸ் உடன் M92, M96 QD-Mini LED TV அறிமுகம்

HIGHLIGHTS

Haier இந்தியாவில் அதன் புதிய ப்ரீமியம் டிவியை அறிமுகம் செய்துள்ளது

அதில் M92 மற்றும் M96 சீரிஸ் QD-Mini LED AI TV கொண்டுவந்துள்ளது

இதில் M92 சீரிஸ் 65-இன்ச் மற்றும் 75 இன்ச் சைஸ்களில் வருகிறது ஆனால், M96 100 இன்ச் மாடல் கொண்டுவதுள்ளது

Haier யின் புதிய 100-இன்ச் சைஸ் உடன் M92, M96 QD-Mini LED TV அறிமுகம்

Haier இந்தியாவில் அதன் புதிய ப்ரீமியம் டிவியை அறிமுகம் செய்துள்ளது அதில் M92 மற்றும் M96 சீரிஸ் QD-Mini LED AI TV கொண்டுவந்துள்ளது, இதில் M92 சீரிஸ் 65-இன்ச் மற்றும் 75 இன்ச் சைஸ்களில் வருகிறது ஆனால், M96 சீரிஸில் 100 இன்ச் மாடல் கொண்டுவதுள்ளது மேலும் இது M96 யில் 85 இன்ச் வெர்சனை விரைவில் சேர்க்கப்படும் மேலும் இந்த டிவியின் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Haier QD-Mini LED TV விலை தகவல்

ஹையர் M92 சீரிஸ் விலை ₹105,990 இல் தொடங்குகிறது மற்றும் தற்போது வாங்குவதற்குக் கிடைக்கிறது. M96 தொடர் 100-இன்ச் மாடலுக்கு ₹399,999 இல் தொடங்குகிறது மற்றும் செப்டம்பர் 30, 2025 முதல் விற்பனைக்கு வரும். M96 இன் 85-இன்ச் வெர்சன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

Haier QD-Mini LED TV சிறப்பம்சம்

Haier யின் இந்த இரு டிவி மாடலும் பெஸல் லெஸ் டிசைன் மற்றும் 98 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேசியோ வழங்குகிறது இதனுடன் இதில் அட்ஜச்பில் ஹைட் ஸ்டேண்ட் உடன் வருகிறது. மேலும் இந்த டிவி மிக சிறந்த டிசைன் செட்டப் உடன் மற்றும் soundbar இல்லமலும் QD Mini LED டெக்நோலாஜி மூலம் மிக சிறப்பாக செயல்படும், இதை தவிர இதன் ப்ரைட்னஸ் மேம்படும் மேலும் M92 யின் 75 மாடலில் 576 இண்டிபெண்டன்ட் டிம்மிங் ஜோன் வழங்குகிறது, அதுவே M96 யில் மிக சிறந்த வியுவிங் அம்சம் வழங்குகிறது.

இதையும் படிங்க Top 5 TV Brand: ஒவ்வொரு டாப் பிராண்டுக்கும் ஒரு அம்சம் இருக்கு அது என்னனு உங்களுக்கு தெரியுமா

நிறம் மற்றும் மாறுபாடு 99 சதவீத DCI-P3 கவரேஜ் மற்றும் 16-பிட் லைட் கண்ட்ரோல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. HDR10+ அடாப்டிவ் மற்றும் டால்பி விஷன் IQ ஆகியவை பிரகாசத்தையும் வண்ணத்தையும் தானாகவே சரிசெய்கின்றன, அதே நேரத்தில் M96 2 சதவீத பிரதிபலிப்பு மற்றும் பரந்த 178-டிகிரி பார்வை கோணத்தையும் கொண்டுள்ளது.

KEF UK ஆல் ஆடியோ டியூன் செய்யப்படுகிறது. M92 2.1-சேனல் அமைப்புடன் வருகிறது, மேலும் M96 ஒரு சப்வூஃபருடன் 6.2.2-சேனல் அமைப்பைக் கொண்டுள்ளது. சரவுண்ட் சவுண்ட், தெளிவான கான்வேர்செசன் மற்றும் நிலையான சவுண்ட் அளவுகளுக்கு இரண்டும் Dolby Atmos மற்றும் டோட்டல் சோனிக்ஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது .

கேமிங்கிற்கு, இரண்டு மாடல்களும் 144Hz புரெப்ராஸ் ரேட் VRR, ALLM, HDMI 2.1, Dolby Vision Gaming மற்றும் AMD FreeSync Premium Pro ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது . அவை 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்தால் இயக்கப்படுகின்றன, மேலும் குறைந்த தாமதத்துடன் மென்மையான கேமிங்க்காக கேம் பிக்சர் மோட்கள், ஷேடோ என்ஹான்ஸ்மென்ட் மற்றும் கிராஸ்ஹேர் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

மேலும் இந்த டிவியில் Haier யின் AI Ultra சென்ஸ் ப்ரோசெசர் உடன் AI Center MAX, AI சீன் டிடக்ஷன், இதனுடன் இதில் AI கலர் பூஸ்ட் pro, AI-HDR Enhancer Pro, AI-டெப்த் , AI-மோஷன் , மற்றும் AI-SR அப்ஸ்கேலிங் 4K குவாலிட்டி வழங்குகிறது.

இதனுடன் இந்த டிவியில் Google TV AI அடிபடையின் கீழ் இதில் கூகுள் அசிஸ்டன்ட், வொயிஸ் கண்ட்ரோல் உடன் உங்கள் டிவியை ஸ்மார்ட் டிவைஸ் உடன் HaiSmart, HaiCast சப்போர்ட் வயர்லஸ் ப்ரொஜெக்டர் இதில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் ஆடியோ ப்ளேபேக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo