கொரானா ஊரடங்குக்கு பிறகு தற்பொழுது பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடி வற்றி பெற்றுள்ளது அந்த வகையில் விக்ரம் படத்துக்கு பிறகு பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், ராக்கெட்ரி படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. யானை படமும் 1100 திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை மையமாக கொண்டு மாதவன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'ராக்கெட்ரி நம்பி விளைவு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்துக்கு பிறகு பெரிய படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், ராக்கெட்ரி படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1100 திரையரங்குகளில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிபிளாக் படம் இன்று திரைக்கு வந்துள்ளன. இந்த படத்தில் அருள் நிதியுடன் அவந்திகா, கருபழனியப்பன், தலைவாசல் விஜய், ரமேஷ்கண்ணா, உமா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். ரான் யதான் யோஹனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.