இந்த வாரம் OTT யில் வெளியாகும் அசத்தலான திரைப்படங்கள் நீங்களும் பாருங்க.

HIGHLIGHTS

வீட்டில் இருந்தபடி திரைப்படம் பார்க்க பிடிக்குமா ? உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வாரம் ஓடிடியில் ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல் என பல ஜானரில் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது

நெட்ஃபிளிக்ஸ், சோனி லிவ் போன்ற ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ

இந்த வாரம் OTT யில் வெளியாகும் அசத்தலான திரைப்படங்கள் நீங்களும் பாருங்க.

வீட்டில் இருந்தபடி திரைப்படம் பார்க்க பிடிக்குமா ? உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வாரம் ஓடிடியில் ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல் என பல ஜானரில் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், சோனி லிவ் போன்ற ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சர்தார் : நடிகர் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சர்தார் திரைப்படம் ஆகா ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகிவுள்ளது.

1899 : 1899 என்ற ஜெர்மன் வெப் சீரிஸ் நவம்பர் 17 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிவுள்ளது. இந்த சீரிஸ் செம்ம த்ரில்லிங்காக உள்ளது என பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

காட் ஃபாதர் : தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, ஹிந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இருவரும் இணைந்து காட் ஃபாதர் படத்தில் நடித்திருந்தனர். இருவரின் ரசிகர்களுக்கும் இந்த படம் ட்ரீட்டாக அமைந்தது. பொலிடிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான காட் ஃபாதர் நவம்பர் 19 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது.

அனல் மேலே பனித்துளி : ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் சோனி லிவில் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.

வொண்டர் வுமென் : நதியா, நித்யா மேனன், பார்வதி, பத்ம ப்ரியா இப்படி பல ஹீரோயின்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள வொண்டர் வுமென் திரைப்படம் நவம்பர் 18 ஆம் தேதி சோனி லிவில் வெளியாகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது.

சீதா ராமம் : துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான சீதா ராமம் காதலர்களின் மனதிற்கு நெருக்கமான படமாக உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. தற்போது சீதா ராமம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு நவம்பர் 18 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

குமாரி : மலையாளத்தில் மித்தாலாஜிக்கல் ஃபாண்டஸி திரைப்படமாக வெளியான குமாரி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது.

இரவதம் : தெலுங்கில் மிஸ்டரி த்ரில்லர் திரைப்படமாக வெளியான இரவதம் நவம்பர் 17 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile