தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! இன்று வெர்லியாகிறது.

HIGHLIGHTS

வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறா

தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது

இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திற்கு தெலுங்கில் 'வாரிசுடு' என்றும் தமிழில் 'வாரிசு' என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவுபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடிகர் விஜயின் பிறந்த நாள் வருவதையொட்டி, அதற்கு முன்னதாக, இன்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/SVC_official/status/1538470668617932800?ref_src=twsrc%5Etfw

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :