தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா, தற்போது தனது பயனர்களுக்கு புது சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான வி ஆப் மூலம் பயனர்கள் ரூ.50 கேஷ்பேக் இலவசமாக பெற முடியும்.
மொபைல் ரிசார்ஜ் செய்ய ஏராளமான மூன்றாம் தரப்பு செயலிகள் கிடைக்கின்றன. பயனர்களும் இவற்றை கொண்டே ரிசார்ஜ்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக வி நிறுவனம் தனது பயனர்கள் ரிசார்ஜ் செய்ய சொந்த மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும் என நினைக்கிறது. வி செயலியை கொண்டு வோடபோன் ஐடியா நம்பர்களை மட்டும் ரிசார்ஜ் செய்ய முடியும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது மொபைல் செயலியை வளர்க்க முதலீடு செய்து வருகிறது. மேலும் இந்த செயலியை தூப்பர் ஆப்-ஆக மாற்ற முடிவு செய்து உள்ளது. சூப்பர் ஆப் வடிவில் வோடபோன் ஐடியா நிறுவனம் பயனரின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் ஒற்றை பிளாட்பார்ம் ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து இருக்கிறது. செயலியில் இருந்த படி பயனர்களுக்கு பாடல்களை வழங்குவதற்காக வோடபோன் ஐடியா நிறுவனம் ஏராளமான கூட்டணியை அமைத்து இருக்கிறது.
பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா நிறுவன மொபைல் நம்பருக்கு ரிசார்ஜ் செய்ய வி செயலியை புதிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் ரீசார்ஜ் செய்தால் ரூ.50 கேஷ்பேக்கும், 30 ரிவார்ட் காயின்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பயனர்கள் மத்தியில் வி செயலியை பிரபலப்படுத்தவும், அதன்மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும் வோடபோன் ஐடியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது