இரவு முழுவதும் இலவச இன்டென்ட் Vodafone Idea வின் அசத்தல் சலுகை.

இரவு முழுவதும் இலவச இன்டென்ட் Vodafone Idea வின் அசத்தல் சலுகை.
HIGHLIGHTS

VI (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேர அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

ஒடிடி தளங்கள், வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் வழங்கும்

VI (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரவு நேர அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இதனை நள்ளிரவு 12 மணி துவங்கி காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். இந்த சலுகை வி ரூ. 249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட சலுகைகளுக்கு மட்டும் பொருந்தும்.

மேலும் இரவு நேர அதிவேக டேட்டா சலுகை பிப்ரவரி 16 ஆம் தேதி அல்லது அதன் பின் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே பொருந்தும். இணையதளம் மற்றும் ஒடிடி பயன்பாடு இரவு நேரங்களில் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பதாக வி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஒடிடி தளங்கள், வி மூவிஸ் மற்றும் டிவி ஆப் வழங்கும் தரவுகளை டவுன்லோட் செய்தல், இதர இணையதள பிரவுசிங் மற்றும் டவுன்லோட் உள்ளிட்டவைகளை இரவு நேர அதிவேக டேட்டா கொண்டு மேற்கொள்ளலாம் என்றும் வி தெரிவித்து உள்ளது.

வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வி நிறுவன சேவையை பயன்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை வி நெட்வொர்க் பயன்படுத்த செய்யும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வார இறுதியில் டேட்டா ரோல் ஒவர் சலுகையை வி நிறுவனம் அறிவித்து இருந்தது.

இளம் வயதினர் இரவு நேரங்களில் அதிக டேட்டா பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சலுகை அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என வி நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வி நிறுவனம் ரூ. 351 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இந்த சலுகையில் 100 ஜிபி டேட்டா எவ்வித கட்டுபாடு மற்றும் வேலிடிட்டிக்கான கால அளவின்றி வழங்கியது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo