வோடபோன் ஐடியா சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது.

வோடபோன் ஐடியா சுமார் 3.6 கோடி வாடிக்கையாளர்களை  இழந்தது.
HIGHLIGHTS

கிராமங்களில் இந்த இணைப்புகள் (52.32 கோடியில் இருந்து) 50.99 கோடியாக குறைந்து இருக்கிறது.

முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது இது 2.40 சதவீதம் சரிவாகும்.

இந்தியாவில் 2019 நவம்பர் இறுதி நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது. போன் இணைப்புகள் பற்றி இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரங்களை பார்ப்போம். இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இது 2.40 சதவீதம் குறைவாகும். 

நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.38 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கையில் ஒவ்வொரு மாதமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து நவம்பர் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக குறைந்து இருக்கிறது. முந்தைய மாதத்துடன் ஒப்பிடும் போது இது 2.40 சதவீதம் சரிவாகும்.

 கிராமங்களில் இந்த இணைப்புகள் (52.32 கோடியில் இருந்து) 50.99 கோடியாக குறைந்து இருக்கிறது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 115.44 கோடியாக உள்ளது.நவம்பர் மாதத்தில், நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 66.60 கோடியாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் அது 68.17 கோடியாக இருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இணைப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ நிறுவனம் 56 லட்சம் புதிய இணைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்து பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். 3.41 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளை வழங்கி இருக்கின்றது. அதே சமயம் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

அடுத்து பாரதி ஏர்டெல் (13.99 கோடி), வோடாபோன் (11.99 கோடி), பி.எஸ்.என்.எல். (2.25 கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிக இணைப்புகளை வழங்கி இருக்கின்றன. அகன்ற அலைவரிசை இணைப்புகளின் அடிப்படையில் முன்னணி 5 நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தைப்பங்கு 98.99 சதவீதமாக இருக்கிறது.

நவம்பர் மாதத்தில் அகன்ற அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கை 2.67 சதவீதம் வளர்ச்சி கண்டு 66.13 கோடியாக உயர்ந்து இருக்கிறது. முந்தைய மாதத்தில் அது 64.41 கோடியாக இருந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக 37.07 கோடி இணைப்புகளுடன் முன்னிலையில் உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo