Vivo யின் அதன் புதிய Vivo V70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

HIGHLIGHTS

Vivo இன்று இந்திய சந்தையில் அதன் Vivo V70 சீரிஸ் அறிமுகம் செய்தது

இதில் Vivo V70 மற்றும் Vivo V70 Elite ஆகியவை அடங்கும்

Vivo V60 மற்றும் V60e போனின் அப்டேட் வெர்சனாகும்

Vivo யின் அதன் புதிய Vivo V70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க

Vivo இன்று இந்திய சந்தையில் அதன் Vivo V70 சீரிஸ் அறிமுகம் செய்தது. இதில் Vivo V70 மற்றும் Vivo V70 Elite ஆகியவை அடங்கும். இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Vivo V60 மற்றும் V60e போனின் அப்டேட் வெர்சனாகும் Vivo V70 Elite 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் 6,500mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo V70 Elite சிறப்பம்சம்.

Vivo V70 Elite ஆனது 2750 × 1260 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரஸ் ரேட் , 459 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 5000 nits வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.. இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 8s Gen 3 சிப்செட்டால் இயக்கப்படுகிறது மற்றும் Android 16 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 யில் இயங்குகிறது.

இந்த போனில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,500mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது கனெக்ஷன் விருப்பங்களில் 5G, டூயல் சிம், ப்ளூடூத் 5.4, USB டைப்-C 2.0, GPS, OTG மற்றும் NFC ஆகியவை அடங்கும். செக்யூரிட்டிக்காக , இந்த தொலைபேசி 3D அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனிங் 2.0 உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 8GB/12GB ரேம் மற்றும் 256GB/512GB இண்டேனால் ச்டோரேஜை கொண்டுள்ளது.

கேமரா செட்டிங் பொறுத்தவரை, V70 எலைட், f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ZEISS ப்ரைமரி கேமராவையும், f/2.65 துளை மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ZEISS சூப்பர் டெலிஃபோட்டோ கேமராவையும், f/2.2 அப்ரட்ஜர் மற்றும் OIS ஆதரவுடன் 8-மெகாபிக்சல் ZEISS அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக , f/2.0 அப்ரட்ஜர் கொண்ட 50-மெகாபிக்சல் ZEISS முன் கேமரா வழங்கப்படுகிறது.

இது டஸ்ட் மற்றும் வாட்டார் ரேசிஸ்ச்டன்ட்க்காக் IP68 மற்றும் IP69 என ரேட்டிங் செய்யப்பட்டுள்ளது . டைமென்ஷன் பொறுத்தவரை, Authentic Black மாடல் 15.752 cm, நீளம், 7.433 cm, திக்னஸ் , 0.740 cm அகலம் மற்றும் 187 கிராம் எடை கொண்டது. Passion Red மற்றும் Sand Beige மாதிரிகள் 15.752 செ.மீ நீளம், 7.433 செ.மீ திக்னஸ் , 0.759 திக்னஸ் மற்றும் 194 கிராம் எடை கொண்டது.

இதையும் படிங்க புது iPhone 17 மாடலுக்கு அதிரடியாக ரூ,4000 டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Vivo V70 சிறப்பம்சம்.

Vivo V70 ஸ்மார்ட்போன் 6.59-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 2750×1260 பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட், 459 PPI பிக்சல் டென்சிட்டி மற்றும் 5000 nits வரை ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது இந்த போனில் ப்ரோசெசருக்கு Snapdragon 7 Gen 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் Android 16 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 6 யில் இயங்குகிறது. இது 8GB ரேம் மற்றும் 256GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது.

கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், V70 ஆனது f/1.88 அப்ரட்ஜர் மற்றும் OIS ஆதரவுடன் 50-மெகாபிக்சல் ZEISS ப்ரைமரி கேமராவையும், f/2.65 அப்ரட்ஜர் மற்றும் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ZEISS சூப்பர் டெலிஃபோட்டோ கேமராவையும், பின்புறத்தில் f/2.2 துளை மற்றும் OIS ஆதரவுடன் 8-மெகாபிக்சல் ZEISS அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவையும் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , f/2.0 துளை கொண்ட 50-மெகாபிக்சல் ZEISS முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

.இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்கிறது , இது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் உள்ளது.கனெக்ஷன் விருப்பங்களில் 5G, டூயல் சிம், ப்ளூடூத் 5.4, USB டைப்-C 2.0, GPS, OTG மற்றும் NFC ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இந்த போன் 3D அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனிங் 2.0 உடன் பொருத்தப்பட்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்டுள்ளது. பரிமாணங்களைப் பற்றிப் பேசுகையில், தொலைபேசி 15.752 செ.மீ நீளம், 7.433 செ.மீ தடிமன், 0.759 செ.மீ அகலம் மற்றும் 194 கிராம் எடை கொண்டது.

Vivo V70 சீரிஸ் விலை தகவல்.

விவோ வி70 ஸ்மார்ட்போன் 8ஜிபி/256ஜிபி வகை ₹45,999 விலையிலும் , 12ஜிபி/256ஜிபி வகை ₹49,999 விலையிலும் கிடைக்கிறது. விவோ வி70 ஸ்மார்ட்போன் பேஷன் ரெட் மற்றும் லெமன் யெல்லோ வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் 8ஜிபி/256ஜிபி வகை ₹51,999 விலையிலும், 12ஜிபி/512ஜிபி வகை ₹56,999 விலையிலும், 12ஜிபி/512ஜிபி வகை ₹61,999 விலையிலும் கிடைக்கிறது. விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன் பேஷன் ரெட், சாண்ட் பீஜ் மற்றும் ஆதென்டிக் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ வி70 தொடர் ஸ்மார்ட்போன் விவோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், இ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானிலும் கிடைக்கிறது. SBI, HDFC பேங்க் மற்றும் Yes பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் கார்ட்களை 10% கேஷ்பேக் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo