Digit.in

BSNL Plan யின்150 நாள் வேலிடிட்டி இந்த நன்மை யாராலும் தரமுடியாது Jio, Airtel மற்றும் Vi ஓரம்போ

Highlights

BSNL பல குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது

BSNL யின் 397 இந்த திட்டத்தின் நன்மை 150 நாட்களுக்கு நீண்ட வேலிடிட்டியாகும்

கூடுதலாக, கஸ்டமர்கள் 2 ஜிபி தினசரி டேட்டாவின் பலனையும் பெறலாம்

BSNL Plan யின்150 நாள் வேலிடிட்டி இந்த நன்மை யாராலும் தரமுடியாது Jio, Airtel மற்றும் Vi ஓரம்போ

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஜியோ தனது போட்டி விலை ரீசார்ஜ் திட்டங்களின் மூலம் தொடர்ந்து சவால் விடுத்து வருகிறது. இந்த அரசு நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, மேலும் விரைவில் அதன் 5ஜி சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

BSNL பல குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது மேலும் இதில் அதிகபட்ச வேலிடிட்டி நன்மை வழங்குகிறது , அத்துடன் கஸ்டமர்களுக்கு கணிசமான மதிப்பை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு BSNL திட்டம் 150 நாட்கள் சேவையை தனியார் நிறுவனங்கள் ஒரு எளிய 28 நாள் திட்டத்திற்கு வசூலிக்கும் அதே விலையில் வழங்குகிறது.

BSNL 397ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் 397 இந்த திட்டத்தின் நன்மையை கேட்டு நீங்களே வாயடைத்து போவிங்க, இந்த ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு 150 நாட்களுக்கு நீண்ட வேலிடிட்டியாகும் மற்றும் அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் காம்ப்ளிமேன்றி SMS சேவைகள் போன்ற பல நன்மைகளை உள்ளடக்கியது. BSNLயின் செகண்டரி சிம் ஆகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது போன்ற சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு ஆரம்பத்தில் 30 நாட்களுக்கு எந்த ஒரு நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் நன்மையை பெற முடியும். கூடுதலாக, கஸ்டமர்கள் 2 ஜிபி தினசரி டேட்டாவின் பலனையும் பெறலாம் , அதன் பிறகு கனெக்டிவிட்டி பராமரிக்கும் போது டேட்டா ஸ்பீட் 40 கேபிஎஸ் ஆக குறைகிறது. கூடுதலாக, சேவையின் முதல் மாதத்திற்கு பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 100 இலவச SMS மேசெஜ்களும் வழங்கப்படுகின்றன.

டெலிகம்யூனிகேசன் துறையில் BSNL யின் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய லோகோ மற்றும் ஸ்லோகனை வெளியிட்டது, இது 24 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க மறுபெயரிடுதல் முயற்சியைக் குறிக்கிறது. இது தவிர, BSNL ஏழு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இப்போது நாடு முழுவதும் அதன் வணிக 4G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

இதை தவிர நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் 5G சேவையை கொண்டுவர மும்புரமாக வேலை செய்து வருகிறது. மேலும் பி.எஸ்.என்.எல் யின் குறிக்கோள் நெட்வொர்க் வலுப்படுத்த 100000க்கும் அதிகமான புதிய மொபைல் டவர் நடவேண்டும், அதில் ஏற்கனவே 35000க்கும் அதிகமான ஆரமபமகியது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile