TATA SKY DTH சேவையை வழங்கி வந்த நிலையில் இனி பிராட்பேண்ட் சலுகையும் வழங்கும்

TATA SKY  DTH சேவையை வழங்கி வந்த நிலையில் இனி பிராட்பேண்ட் சலுகையும் வழங்கும்
HIGHLIGHTS

டாடா ஸ்கை நிறுவனத்தின் பிராட்பேண்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவைகள் இந்தியா முழுக்க 21 நகரங்களில் கிடைக்கிறது.

இது வரை DTH சேவையை வழங்கி  வந்த  டாட்டா ஸ்கை தற்பொழுது  டாடா ஸ்கை நிறுவனம் பிராட்பேண்ட் சலுகையும் சந்தையில் களமிறங்குகிறது இதனுடன்  டாடா ஸ்கை நிறுவனத்தின் பிராட்பேண்ட் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் சலுகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், டாடா ஸ்கை பிராட்பேண்ட் அன்லிமிட்டெட் சலுகைகளை அறிவிக்க துவங்கி இருக்கிறது. இதனுடன் 
தற்சமயம் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சேவைகள் இந்தியா முழுக்க 21 நகரங்களில் கிடைக்கிறது. 

இதன் ஆரம்ப விலை ரூ. 590 சலுகையில் பயனர்களுக்கு 16Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவை, இலவச ரவுட்டர், டேட்டா ரோல்ஓவர் மற்றும் சேஃப் கஸ்டடி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ. 700 விலை சலுகையில் 25Mbps வேகத்தில் இன்டர்நெட்  சேவையும், ரூ. 800 சலுகையில் 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது.

அகமதாபாத்தில் டாடா ஸ்கை பிராட்பேண்ட் சலுகை ரூ. 590 எனும் மாத கட்டணத்தில் கிடைக்கிறது. இதில் ஒரு மாதத்திற்கான அன்லிமிட்டெட் பலன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர டாடா ஸ்கை சேவையில் மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்துடன் ரூ. 1,100 மற்றும் ரூ. 1,300 மாதாந்திர சலுகைகளில் 75Mbps மற்றும் 100Mbps வேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. புதிய சலுகைகள் அனைத்திலும் இலவச ரவுட்டர் வழங்கப்படுகிறது. இருப்பினும் , பயனர்கள் இச்சலுகையை பயன்படுத்த இன்ஸ்டாலேஷன் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாதாந்திர சலுகையை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கான சலுகை கட்டணம் ரூ. 1770 முதல் துவங்குகிறது. இச்சலுகையில் 16Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் 25Mbps மற்றும் 50Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் சலுகைகளின் கட்டணம் முறையே ரூ. 2,100 மற்றும் ரூ. 2,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று ரூ. 5310 விலையில் துவங்கி ஒன்பது மாதங்களுக்கான சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஒன்பது மாதங்களுக்கான சலுகையை செலக்ட் செய்யும் போது 13 மாதங்களுக்கான பலன்களை பெற முடியும்.

75Mbps மற்றும் 100Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கும் சலுகைகளின் கட்டணம் ரூ. 3,300 மற்றும் ரூ. 3,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ஒரு மாதத்திற்கான சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் இன்ஸ்டாலேஷன், சேஃப் கஸ்டடி மற்றும் ரவுட்டர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo