ரிலையன்ஸ் ஜியோவின் கலக்கல் ஆபர் 8 ஜிபி இலவச டேட்டா வழங்கி அசத்துகிறது…!

ரிலையன்ஸ் ஜியோவின்  கலக்கல் ஆபர் 8 ஜிபி இலவச டேட்டா  வழங்கி அசத்துகிறது…!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்தியாவில் ஜியோ துவங்கியது முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. குறைந்த விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. முன்னதாக கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.

https://static.digit.in/default/f6ee24cfa46a11fa9d680810231d4a803399745f.jpeg

அதன்படி டெய்ரி மில்க் சாக்லேட் கவரை போட்டோ எடுத்து மைஜியோ ஆப் மூலம் அப்லோடு செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 2 ஜிபி டேட்டாவினை தினமும் வழங்க ஜியோ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜியோ வாடிக்கையாளர்கள் செலபிரேஷன் பேக் பயன்படுத்த முடியும் என்ற வகையில், ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கூடுதல் டேட்டா மற்றும் அதன் வேலிடிட்டி சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ ஆப் மற்றும் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile