ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது நீண்ட நாள் வேலிடிட்டியுடன் இரண்டு புத்தம் புதிய சலுகை..!

HIGHLIGHTS

ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ  அறிவித்துள்ளது  நீண்ட நாள் வேலிடிட்டியுடன்  இரண்டு புத்தம் புதிய  சலுகை..!

ரிலையன்ஸ் ஜியோ தற்பொழுது நீண்ட நாட்கள்  வேலிடிட்டி கொண்ட இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.594 மற்றும் ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இரு சலுகைகளும் ஜியோபோன் பயன்படுத்துவோருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரூ.594 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 168 நாட்கள் ஆகும்.

ரூ.297 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஜியோ சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா (டேட்டா தீர்ந்ததும் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்), 28 நாட்களுக்கு 300 SMS . மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது விலை குறைந்த சலுகையை ரூ.49 விலையில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த சலுகை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile