ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது

HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது

ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டிரையல் துவங்கப்பட்டது. தற்போது இன்வைட் செய்யப்பட்ட ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் நத்வாரா மற்றும் ராஜஸ்தானில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தளங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீராக கிடைக்கும்.

"ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 5ஜி சேவை தேர்வு செய்யப்பட்ட சிலருக்கோ அல்லது பெரும் நகரங்களில் வசிப்போருக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருக்கக் கூடாது. இந்த சேவை ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீடு மற்றும் வியாபாரத்திலும் இந்தியா முழுக்க கிடைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஜியோட்ரூ5ஜி வழங்குவதற்கான பயணம் தான் இது," என ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவன தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்தார்.

ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் பயனர்கள் இந்த சேவையை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி வைபை சேவைகள் ஜியோ சேவையை பயன்படுத்தாத பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பயன்படுத்திய பிறகு ஜியோ சேவையில் இணைந்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo