குறைந்த விலையில் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் அதிரடி அறிவிப்பு.

குறைந்த விலையில் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் அதிரடி  அறிவிப்பு.
HIGHLIGHTS

Jio பிளாட்ஃபார்ம்களில், கூகுள் நிறுவனம் ரூ. 33,737 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பிளே ஸ்டோருக்கு கஸ்டமைசேஷனுடன் அறிமுகமாக இருக்கிறது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்களில், கூகுள் நிறுவனம் ரூ. 33,737 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார். 
 
இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகள் கிடைக்கும். கூகுள் முதலீட்டை சேர்த்து, ஜியோ பிளாட்ஃபார்ம் இதுவரை ரூ. 1,52,056 கோடி தொகைய ஃபேஸ்புக், விஸ்டா ஈக்விட்டி, கொல்கத்தா நைட் ரைடரஸ் என பல்வேறு நிறுவனங்களில் இருந்து முதலீடாக பெற்று இருக்கிறது. 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிமாற்றங்கள் அனைத்திற்கும் முறையான ஒழுங்குமுறை மற்றும் இதர அனுமதிகள் பெற வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இவைதவிர இந்தியாவின் முதல் கிளவுட் சார்ந்த வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜியோ மீட் வெளியான சில நாட்களில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். 

இத்துடன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பிளே ஸ்டோருக்கு கஸ்டமைசேஷனுடன் அறிமுகமாக இருக்கிறது.

ஜியோ மற்றும் கூகிளின் கூட்டு
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் கூறுகையில், இந்தியா போன்ற ஒரு நாட்டில் அனைவருக்கும் இணையம் இருக்க வேண்டும். ஜியோ மற்றும் கூகிள் கூட்டுடன் ஸ்மார்ட்போன்கள் இல்லாத மில்லியன் கணக்கான இந்தியர்கள் இணையத்தைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது. முன்னதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோமீட் எனும் வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி அன்லிமிட்டட் கால்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo