நீண்ட வேலிடிட்டி கொண்ட டெலிகாம் நிறுவனங்களின் அதிரடியான திட்டங்கள்

நீண்ட வேலிடிட்டி கொண்ட  டெலிகாம் நிறுவனங்களின்  அதிரடியான திட்டங்கள்
HIGHLIGHTS

புத்தாண்டு சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாற்றாக மாதாந்திர ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்ய துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், "இது டெலிகாம் நிறுவனங்களுக்கு நற்செய்தியாக இருக்கும். இதன் மூலம் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும். சரிவில் இருப்பதாக சொல்லப்படும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இது வருவாய் ஈட்டும் வகையில் அமைந்து இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.

"மூன்று மாதங்கள் வேலிடிட்டி கொண்ட சலுகைகளுக்கு மாற்றாக ஒரு மாத ரீசார்ஜ் சலுகைகளை தேர்வு செய்யும் போது வாடிக்கையாளர்கள் 40 முதல் 50 சதவீதம் வரை கூடுடுதலாக செலவிட வேண்டும்" என தனியார் ஆய்வு மைய தலைவர் ராஜிவ் ஷர்மா தெரிவித்தார்.

இதே நிலை தொடரும்பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எளிதில் மற்ற நெட்வொர்க்களுக்கு மாறும் நிலை அதிகரிக்கும் என்றும் டெலிகாம் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர சலுகையை தேர்வு செய்வோருக்கு அதிகளவு தள்ளுபடி மற்றும் இலவசங்களை வழங்கி வருகின்றன.

இதே சலுகையை ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஜியோ புத்தாண்டு சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ எண்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 0.5 ஜி.பி. டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளுக்கான சந்தா மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இதனாலேயே ரிலையன்ஸ் ஜியோ தனது ரூ. 2,199 சலுகையின் விலையை குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 2,020 என மாற்றி அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, இலவச எஸ்.எம்.எஸ்., ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியினை 365 நாட்களுக்கு வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo