Jio கம்மி விலையில் அன்லிமிடெட் காலிங் நன்மை தரும் பெஸ்ட் பிளான்
Jio Voice Only Plans TRAI யின் அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட்டது
சமிபத்தில் Jio Voice Only Plans TRAI யின் அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட்டது
நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து நீண்ட நாள் வரை அன்லிமிடெட் காலிங் நன்மை பெறலாம்
Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு சமிபத்தில் Jio Voice Only Plans TRAI யின் அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட்டது இந்த திட்டத்தின் கீழ் நாம் ஏற்கனவே குறைந்த விலையில் ஒரு மாதம் வரை அன்லிமிடெட் காலிங் நன்மையை பார்த்தோம் அந்த வகையில் இப்பொழுது நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து நீண்ட நாள் வரை அன்லிமிடெட் காலிங் நன்மை பெறலாம் அந்த வகையில் குறைந்த விலையில் நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டம்.
Jio ரூ,197 திட்டம்:-Jio ரூ,197 வரும் திட்டமானது அன்லிமிடெட் வைஸ் காலிங் நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டதின் கீழ் 300SMS நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டியோ Calendar Month என குறிப்பிடப்பட்டுள்ளது அதாவது அந்த மாதத்தில் வரும் நாட்கள் பொருத்தது அந்த மாதத்தில் 31 நாட்கள் இருகால் இருந்தால் அந்த திட்டம் 31 நாட்கள் வேலிடிட்டி தரும்
Jio ரூ,ரூ. 448 திட்டம்:- ஜியோவின் இந்த திட்டம், ரூ. 448 திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இது 84 நாட்கள் வேலிடிட்டி காலம் மற்றும் 1,000 SMS வழங்குகிறது. இதன் சராசரி தினசரி செலவு சுமார் ரூ. 5.33 ஆகும். மேலும் இந்த திட்டம் சுமார் 3 மாதங்கள் வரையிலான வேலிடிட்டியை வழங்குகிறது.
Jio ரூ. 1,748 திட்டம்:- ஜியோவின், ரூ. 1,748 ரீசார்ஜ் திட்டத்தில் வரும் ப்ளான் 336 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்குகிறது. இதில் 3,600 SMS மற்றும் அன்லிமிடெட் கால்கள் அடங்கும். இதன் சராசரி தினசரி செலவு தோராயமாக ரூ. 5.20 ஆகும். இதன் பொருள், நீண்ட கால அடிப்படையில், இந்தப் லிஸ்ட்டில் இதுவே மிகக் குறைந்த சராசரி தினசரி செலவைக் கொண்டுள்ளது.
இருப்பினும், விலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல யோசனையல்ல. ஒரு நேரத்தில் ₹1,748 செலவழிப்பது தங்களுக்கு வசதியானதா என்பதையும் வாடிக்கையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், 336 நாட்கள் என்பது முழுமையான 365 நாட்களுக்குச் சமமானதல்ல.
TRAI யின் வலியுறுத்தலின் படி இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
வொயிஸ் மற்றும் SMS சேவைகளுக்குத் தனித்தனி ரீசார்ஜ்கள் வேண்டும் என்ற கோரிக்கை புதியதல்ல. 2024 டிசம்பர் 23 அன்று, டெலிகாம் கன்ஸ்யூமர்பாதுகாப்புச் சட்டத்தின் 12வது திருத்தத்தின் கீழ், வொயிஸ் மற்றும் SMS சேவைகளை மட்டும் வழங்கும், அதிகபட்சம் 365 நாட்கள் உடன் இதன் வேலிடிட்டி குறைந்தபட்சம் ஒரு சிறப்புத் கட்டண வவுச்சரையாவது வழங்குமாறு டிராய் (TRAI) நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
இன்டர்நெட் டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு ஒரு விருப்பத்தை வழங்குவதே இதன் நோக்கமாக இருந்தது. இதில் மூத்த குடிமக்கள், ஃபீச்சர் ஃபோன் பயனர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும், முதன்மையாக காலிங் மட்டுமே (Voice Only) மொபைல் பயன்பாட்டைக் கொண்ட கஸ்டமர்களை கொண்டுள்ளது . ஏப்ரல் 2026-ல், மாறுபட்ட வேலிடிட்டி கால அளவுகளுடன் டேட்டாவுடன் இணைக்கப்பட்ட திட்டங்களுக்கு இணையாக வாய்ஸ்-SMSவிருப்பங்களை வழங்குவதை முன்மொழிந்து, டிராய் ஒரு வரைவுத் திருத்தத்தையும் வெளியிட்டது.