Jio,2G/3G சேவையை நிறுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

HIGHLIGHTS

Reliance Jio, 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை மூடுவதற்கான கொள்கையை உருவாக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களை 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளுக்கு மாற்றுமாறு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

இதற்குப் பதிலளித்த ரிலையன்ஸ் ஜியோ, "2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை முற்றிலுமாக முடக்கும் கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும்

Jio,2G/3G சேவையை நிறுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Reliance Jio, 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை மூடுவதற்கான கொள்கையை உருவாக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட ‘5G சுற்றுச்சூழல் மூலம் டிஜிட்டல் மாற்றம்’ என்ற ஆலோசனைக் கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களை 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளுக்கு மாற்றுமாறு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மற்றொரு டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியாவும் இதேபோன்ற ஆலோசனையை வழங்கியுள்ளது. இத்தகைய இடையூறுகள் டிஜிட்டல் பிளவுக்கு வழிவகுக்கும் மற்றும் 5G எகொசிச்டம் அமைப்பை பாதிக்கிறது என்று அது கூறுகிறது. 5Gக்கான எகொசிச்டம் அமைப்பின் வளர்ச்சியில் உள்ள தடைகள் குறித்த ஆலோசனைகளை TRAI கோரியிருந்தது. இதற்குப் பதிலளித்த ரிலையன்ஸ் ஜியோ, “2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்குகளை முற்றிலுமாக முடக்கும் கொள்கையை அரசு கொண்டு வர வேண்டும். இதனால் நெட்வொர்க்கில் ஏற்படும் தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படும், மேலும் அனைத்து வாடிக்கையாளர்களும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு மாற்றப்படலாம்” என்று கூறியுள்ளது. இதனுடன், இது 5Gக்கான எகொசிச்டம் அமைப்பை உருவாக்குவதை எளிதாக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வலுவான 5G கனேக்டிவிட்டிக்கு அதிக அளவிலான ஸ்பெக்ட்ரம் கிடைப்பது மற்றும் ஒதுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. Bharti Airtel மற்றும் ரிலையன்ஸ் jio அதன் ஸ்பெக்ட்ரம் 5G சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்த நிறுவனங்களுக்கு இந்த சேவைக்காக 12.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இருப்பினும், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தற்போதைய 4ஜி கட்டணத்தில் 5ஜி கனேக்டிவிட்டியை வழங்குகின்றன. இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் அடங்கும். இந்த நிறுவனங்கள் தங்கள் அன்லிமிடெட் 5G திட்டங்களை விரைவில் நிறுத்தலாம் என்றும் இந்த சேவைக்கான திட்டக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்த இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அன்லிமிடெட் டேட்டா உடன் 4G ரேட்டில் 5G சேவை கொண்டு வருகிறது தற்போதுள்ள சந்தாதாரர்களை 5ஜிக்கு மேம்படுத்த ஊக்குவிப்பதே இதற்குக் காரணம். சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் வருவாயை அதிகரிக்க இந்நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்நிலை விரைவில் மாறலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். இந்த நிறுவனங்களின் 5ஜி திட்டங்கள் 4ஜியை விட 5-10 சதவீதம் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க:Realme 12 Pro Series அறிமுகம் இதன் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo