Jio எக்ஸ்ட்ரா ரூ,11 வித்தியாசத்தில் என்ன கூடுதல் நன்மை இருக்கு?

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு இரண்டு டேட்டா வவுச்சர் கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த இரண்டு திட்டங்களிலும் டேட்டா மற்றும் OTT போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தில் ரூ,100 மற்றும் ரூ,111 என இரண்டு திட்டம் இருக்கிறது வெறும் ரூ,11 வித்தியாசத்தில் என்ன அதிகம் இருக்கிறது மேலும் இந்த இரு திட்டத்திலும் ஒரே மாதுரியான விலை ரேஞ்சில் வருகிறது இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்மற்றும் என்ன நன்மை வழங்குகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
Jio ரூ,100 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.100 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் ஆகும் இதன் நன்மைகள் என பார்த்தல் இதில் இது கஸ்டமர்களுக்கு 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் 30 நாட்கள் வேலிடிட்டி காலம் என்பது, 6ஜிபி டேட்டாவைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்பதாகும். இந்தத் திட்டத்துடன் கஸ்டமர்களுக்கு 30 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சேவையும் வழங்கப்படுகிறது. FUP (ஸ்டேடண்டர்ட் பயன்பாட்டுக் கொள்கை) டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, ஸ்பீட் 64 Kbps ஆகக் குறைந்துவிடும் இதன் வேலிடிட்டி 30 நாட்கள் காலத்துடன் வருகிறது..
Jio ரூ,111 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.111 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சரில் 5GB டேட்டா உள்ளது. மேலும் இதன் நன்மை பற்றி பேசினால், நீங்கள் இரண்டு வெவ்வேறு ஆட்-ஆன் பண்டில்களில் இருந்து தேர்வு செய்யலாம். முதல் பண்டில் கேமிங் பேக் ஆகும், இது உங்களுக்கு 56 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் மொபைல் அக்சஸ் வழங்கும். இரண்டாவது பண்டில் யூத் பேக் ஆகும், இது உங்களுக்கு 28 நாட்களுக்கு ஜியோகேம்ஸ் மொபைல், ஃபேன்கோட் மற்றும் ஸ்னாப்சாட்+ ஆகியவற்றை வழங்கும். ரீசார்ஜ் செய்த 28 நாட்களுக்குள் நீங்கள் கூடுதல் பலனைப் பெற வேண்டும், இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும் . 28 நாட்களுக்குப் பிறகு பயன்படுத்தப்படாத டேட்டா எக்ஸ்பயர் ஆகிவிடும் .
மேலும் ஆட்-ஆன்களும் 28 நாட்களுக்குச் செயலில் இருக்கும். ஜியோகேம்ஸ் சப்ஸ்க்ரிப்ஷன் ஜியோகேம்ஸ் ஆப் மூலமாகவும், ஸ்னாப்சாட்+ சப்ஸ்க்ரிப்ஷன் மைஜியோ ஆப் மூலமாகவும் பெற வேண்டும். ஃபேன்கோடை அணுக, ஜியோடிவி மொபைல் ஆப்க்கு செல்லவும்.
இதில் எது பெஸ்ட்?
இந்த இரண்டு திட்டமும் பெஸ்ட் தான், ஆனால் ரூ,100 யில் எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை மட்டுமே வழங்கப்படுகிறது, ஆனால் அதன் மறுபக்கம் ரூ,111 யில் வரும் திட்டத்தில் டேட்டா மட்டுமல்லாமல் எக்ஸ்ட்ரா OTT நன்மை JioGames மற்றும் snapchat போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
