Jio சத்தமில்லாமல் மக்களுக்கு பிடித்த அந்த ஒரு திட்டத்தை நீக்கியது

HIGHLIGHTS

Reliance Jio சத்தமில்லாமல் ரூ,209 யில் வரும் திட்டத்தை நீக்கியுள்ளது

MyJio செயலியின் 'குறைந்த விலை பேக்குகள்' பிரிவில் உள்ள 'வேல்யூதிட்டங்கள்'

ஜியோவின் இந்த ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம், 22 நாள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் வருகிறது

Jio சத்தமில்லாமல் மக்களுக்கு பிடித்த அந்த ஒரு திட்டத்தை நீக்கியது

Reliance Jio சத்தமில்லாமல் ரூ,209 யில் வரும் திட்டத்தை நீக்கியுள்ளது நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என்றாலும், MyJio செயலியின் ‘குறைந்த விலை பேக்குகள்’ பிரிவில் உள்ள ‘வேல்யூ திட்டங்கள்’ என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்து வந்த அந்தத் திட்டம், தற்போது காணப்படவில்லை. வெளிப்படைத்தன்மை, பாகுபாடு காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்ட சில கட்டண நடைமுறைகளை நிறுத்துமாறு ரிலையன்ஸ் ஜியோவுக்கு இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) உத்தரவிட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இது நிகழ்ந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ ரூ 209 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் இந்த ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம், 22 நாள் வேலிடிட்டி உடன் இந்த திட்டத்தில் வருகிறது இந்த திட்டத்தில் தினமும் 1GB அதிவேக டேட்டாவை வழங்கியது, இது மொத்தமாக 22GB ஆகும். இந்த பேக்கில், அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS, மற்றும் OTT பலன்களின் ஒரு பகுதியாக JioTV மற்றும் JioAICloud ஸ்டோரேஜ் அணுகல் ஆகியவையும் அடங்கும். தினசரி அதிவேக டேட்டா தீர்ந்தவுடன், அன்றைய மீதி நேரத்திற்கு டேட்டா வேகம் 64 Kbps ஆகக் குறைந்தது. ரூ.209 திட்டத்தின் பயனுள்ள விலை ஒரு நாளைக்கு ரூ.9.5 ஆகும்.

இதையும் படிங்க ஒரு வருட வேலிடிட்டி VI அறிமுகம் செய்த இண்டர்நேஷனல் IR பேக் உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

இந்ததிட்டத்தில் மக்களுக்கு பிடித்தது என்ன ?

தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் ஜியோவின் ஒரே ப்ரீபெய்ட் திட்டமான ரூ.209 பேக்கை பயனர்கள் இனி இழப்பார்கள் . இதை எழுதும் நேரத்தில், இந்தத் திட்டம் MyJio செயலியில் காணப்படவில்லை,

Jio ரூ,152 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,152 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும். இது ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 1 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. காலிங் முற்றிலும் அன்லிமிடடாக செய்யலாம், இதனுடன் இதில் 300 SMS நன்மை வழங்கப்படுகிறது. இது ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. இது பட்ஜெட்டுக்கான முழுமையான திட்டமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile