Jio அறிமுகம் செய்த JioShield அம்சம் ஒரு ஆண்டு வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதுகாப்பு

HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு JioShield என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது

இது ஒரு பாதுகாப்பு மிகுந்த அம்சமாகும்

.JioShield-க்கான ஒரு வருடக் கட்டணம் ரூ. 1,000 ஆகும்;

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு JioShield என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பாதுகாப்பு மிகுந்த அம்சமாகும், இதில் தங்களின் குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்களை வெளியிலும் ஆன்லைனில் இருக்கும்போதும் கண்காணிக்க உதவுகிறது.JioShield-க்கான ஒரு வருடக் கட்டணம் ரூ. 1,000 ஆகும்; இது ஒருமுறை செலுத்தப்படும் பதிவுக்கட்டணமாகும். ஜியோவின் 10-வது ஆண்டு விழாச் சலுகையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்குத் தலா ரூ. 100 மதிப்புள்ள பத்து ரீசார்ஜ் வவுச்சர்கள், 12 மாதங்களுக்கான Canva Pro சந்தா மற்றும் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 5G மேம்படுத்தல் (upgrade) ஆகியவை வழங்கப்படுகின்றன.

JioShield நன்மை என்ன?

ஜியோஷீல்டு, பெற்றோர்கள் லைவ் லொகேஷன் தகவலைப் பார்க்க அனுமதிக்கிறது. மேலும், ஃபோனின் பேட்டரி குறைவாக இருக்கும்போது இது எச்சரிக்கைகளை அனுப்புகிறது. குழந்தைகள் ஸ்க்ரீன் பயன்பாட்டு நேர லிமிட்களை அமைக்கவும், அவர்கள் அணுகக்கூடிய ஆப்கள் மற்றும் கான்டேக்ட்களை கட்டுப்படுத்தவும் இது அனுமதிக்கிறது. தேவைப்பட்டால், அவசரகால உதவி (SOS) எச்சரிக்கைகளையும் அனுப்பலாம், இது குடும்பங்கள் விரைவாக உதவியைப் பெற உதவுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

கஸ்டமர் இதற்காக ரூ,1,000 முன்பணம் செலுத்துவதன் மூலம் ஒரு ஆண்டு வரையிலான ஜியோஷீல்ட் அம்சம் பெறலாம். அதாவது திட்டத்தின் கீழ் ஆண்டு விழா சலுகையின் கீழ் பத்து ரூ,100 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படும் மேலும் ரூ,1,000 வவுச்சரை பத்தாக பிரித்து கொடுக்கப்படுகிறது, இதை தவிர, இந்த ரூ,399 மற்றும் அதற்க்கு அதிகமான அன்லிமிடெட் 5G நன்மை வழங்கும் திட்டத்திலும் இந்த வவுச்சரை பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க Jio வெறும் ரூ,449 யில் ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை ஜாலியா இருக்கலாம்

இது எப்படி எந்த போனில் சப்போர்ட் செய்யும்?

பெற்றோரின் போனில் ஜியோதிங்ஸ் ஆப்பையும் , குழந்தை அல்லது மூத்தவரின் போனில் ஜியோஷீல்ட் செயலியையும் இன்ஸ்டால் வேண்டும். இரண்டு ஆப்களும் இணைக்கப்பட்டவுடன், பெற்றோர்கள் தங்கள் போனிலிருந்தே அனைத்து செட்டிங்களையும் கட்டுப்படுத்தலாம். குழந்தை அல்லது மூத்தவரின் தொலைபேசியில் செயலில் உள்ள ஜியோ எண்ணும், ஆண்ட்ராய்டு 10 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷன் இருக்க வேண்டும். ஜியோதிங்ஸ் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகக் கிடைக்கிறது, அதே சமயம் இது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஐபோன் கஸ்டமர்களுக்கும் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :