Jio யின் புதிய பிளான் வெறும் 234ரூபாயில் 2 மாதங்களுக்கு Free OTT பயன்படுத்த முடியும்

Jio யின் புதிய பிளான் வெறும் 234ரூபாயில் 2 மாதங்களுக்கு Free OTT பயன்படுத்த முடியும்
HIGHLIGHTS

Reliance Jio சத்தமில்லாமல் ஜியோபாரத் போனுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

ஜியோ பாரத் பிளாட்பாரம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது

, ​​ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமான Reliance Jio சத்தமில்லாமல் ஜியோபாரத் போனுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ பாரத் பிளாட்பாரம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக ஃபீச்சர் ஃபோனுடன் தொடர்ந்து இணைந்திருக்க விரும்புபவர்களுக்கு 4G நெட்வொர்க் அக்சசி குறைந்த விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜியோ ஆரம்பத்தில் ஜியோ பாரத் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியபோது, ​​வாடிக்கையாளர்களுக்கு ரூ.123 மற்றும் ரூ.1234 என இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் இப்போது, ​​ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்.

Jio Rs 234 Plan

ரிலையன்ஸ் ஜியோவின் 234ரூபாய் கொண்ட புதிய திட்டத்தில் 56 நாட்களுக்கு சர்விஸ் வேலிடிட்டி உடன் வருகிறது மற்றும் இது வெறும் JioBharat போனில் வேலை செய்யும் இந்த திட்டம் தினசரி 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மொத்த வேலிடிட்டியாகும் 28 ஜிபி டேட்டாவைப் வழங்குகுவர்கள் தவிர, இந்த திட்டத்தில் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 SMS வழங்கப்படுகிறது. காலின் போதும், பயனர்களுக்கு அன்லிமிடெட் வசதி வழங்கப்படுகிறது. இது தவிர, பயனர்கள் தங்கள் போன் நம்பர்களுடன் JioSaavn மற்றும் JioCinema யின் இலவச சந்தாவையும் வழங்குவார்கள்.

FUP டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக குறைகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் ஜியோசினிமா பிரீமியம் சந்தா அல்ல, ஆனால் நீங்கள் வழக்கமான ஜியோ சினிமாவைப் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஜியோவின் மற்ற இரண்டு பிளான்

மாற்ற இரண்டு திட்டங்களை பற்றி பேசினால் இந்த புதிய திட்டத்தைத் தவிர, நிறுவனம் இன்னும் ரூ.123 மற்றும் ரூ.1234 திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ.123 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, ரூ.1234 திட்டம் உங்களுக்கு 336 நாட்கள் அல்லது சுமார் 11 மாதங்கள் வேலிடிட்டியாகும் தன்மையைத் தவிர, இந்த இரண்டு திட்டங்களின் மற்ற நன்மைகள் புதிய ரூ.234 திட்டத்தைப் போலவே உள்ளன.

இருப்பினும் இது 4ஜி சாதனம் என்பதால், ரூ.239க்கு மேல் செலவாகும் ஜியோ பாரத் திட்டங்களுடன் பயனர்களுக்கு 5ஜி வரவேற்பு சலுகை கிடைக்காது. நீங்கள் ரூ.239க்கு மேல் வழக்கமான சந்தா திட்டத்தை வாங்கினால், 5G வெல்கம் சலுகைக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

இதையும் படிங்க:WhatsApp Chat லோக் அம்சத்தில் விரைவில் லிங்க்ட் டிவைஸ் இதனால் என்ன பயன் இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo