Jio ambani
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio அதன் கசடமர்களுக்கு வெறும் ரூ,555 யில் 1000GB வரையிலான டேட்டா நன்மை பெறலாம், ஆனால் இந்த திட்டம் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு அல்ல இது JioHome கஸ்டமர்களுக்காகும். இதன் மூலம் அதிகபட்ச டேட்டா நன்மை பெற முடியும். இதன் மூலம் டேட்டா பிரச்னை இல்லாமல் இருக்கலாம் இதை தவிர சற்று விலை அதிகமாக ரூ,1,555 யில் வரும் மற்றொரு திட்டம் இருக்கிறது இதன் விலை ரூ,1,555 ஆகும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.555 திட்டத்துடன் 1000GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைந்துவிடும். இந்தத் திட்டத்துடன் வாய்ஸ் காலிங் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் உண்டு.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.1555 திட்டத்தில் 3000GB டேட்டா வழங்கப்படுகிறது. FUP டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு, வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்துடன் வேறு எந்தப் பலன்களும் இணைக்கப்படவில்லை. இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக ஜிஎஸ்டியும் விதிக்கப்படும்.
உங்களிடம் ஏற்கனவே செயலில் உள்ள ஃபைபர் அல்லது ஏர்ஃபைபர் கனெக்ஷன் இருந்தால் மட்டுமே ரிலையன்ஸ் ஜியோ இந்தத் திட்டங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும். இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் ஏர்ஃபைபர் கச்டமர்களால் பயன்படுத்தப்படும். ஏனெனில், ஏர்ஃபைபர் பயனர்கள் தங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 1TB டேட்டாவைப் பெறுகிறார்கள், அதேசமயம் ஃபைபர் பயனர்கள் மாதத்திற்கு 3.3TB டேட்டாவைப் பெறாலாம் .
இதையும் படிங்க Jio பக்கா மாஸ் திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டியுடன் கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் கேன்வா ப்ரோ லைட் போன்ற பல
இந்த வகையான டேட்டா வவுச்சர்களுக்கு தேவை மிகவும் குறைவாகவே இருக்கும், ஏனெனில் ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு 1TB என்பதே ஒரு பெரிய அளவு டேட்டாவாகும். அடிப்படைத் திட்டம் எக்ஸ்பயர்ஆகும்போதே இவையும் எக்ஸ்பையர்கிவிடும் என்பதால், இவை விலை உயர்ந்தவையாகவும் இருக்கின்றன