Jio கஸ்டமர்களுக்கு இந்த இரு ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் டேட்டா

Jio கஸ்டமர்களுக்கு இந்த இரு ப்ரீ பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் டேட்டா
HIGHLIGHTS

Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாகும்

தற்பொழுது இந்த நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு போனஸ் டேட்டா நன்மையை வழங்குகிறது,

இந்த போனஸ் திட்டமானது ரூ 399 மற்றும் ரூ,219 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது

Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாகும், தற்பொழுது இந்த நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு போனஸ் டேட்டா நன்மையை வழங்குகிறது, இந்த போனஸ் திட்டமானது ரூ 399 மற்றும் ரூ,219 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டுமே கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இந்த இரு திட்டங்களிலும் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது ரூ,399 கொண்ட திட்டத்தில் 61ரூபாய் மதிப்புள்ள டேட்டாவும், ரூ,219 திட்டத்தில் 25ரூபாய் மதிப்புள்ள டேட்டாவும் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் இந்த இரு திட்டங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Jio Rs 399 Prepaid Plan

ஜியோவின் ரூ.399 திட்டமானது அன்லிமிடெட் காலிங் 3ஜிபி தினசரி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. மேலும், புதிய சலுகையின் கீழ், நிறுவனம் இந்த திட்டத்தில் ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் அடங்கும்.

Jio Rs 219 Prepaid Plan

இது மேலே குறிப்பிட்டுள்ள திட்டத்தின் சற்று குறைந்த விலை பதிப்பாகும். இது 14 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS போன்ற பலன்களை வழங்குகிறது. இப்போது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் ரூ.25 மதிப்புள்ள 2ஜிபி கூடுதல் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இது தவிர, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சப்ச்க்ரிப்சன் இதில் அடங்கும்.

மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டாவை பெறுவது எப்படி?

கூடுதல் டேட்டா பலன்களைப் பெற, பயனர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் தங்கள் ஜியோ ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது முடிந்ததும், MyJio ஆப்ஸ் மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் இருந்து பெறக்கூடிய கூடுதல் டேட்டா வவுச்சர்கள் வடிவில் கிடைக்கும்.

இதையும் படிங்க : OnePlus 12 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் வெளியானது ஜனவரி 23 அறிமுகமாகும்

இது தவிர, ரிலையன்ஸ் ஜியோ ரூ 50 கேஷ்பேக் உடன் வரும் திட்டமும் உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.866 மற்றும் அன்லிமிடெட் காலிங் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் தினமும் 100 SMSபோன்ற பலன்களுடன் வருகிறது

மேலும் நீங்கள் 5G கவரேஜ் ஏரியாவில் இருக்கிர்கள் என்றால் மேலும் உங்களிடம் 5G இருந்தால் நீங்கள் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா பெற முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo