Jio அறிமுகம்படுத்தியது 2 புதிய Work from Home பிளான் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக் கிடைக்கும்

HIGHLIGHTS

ஜியோ நிறுவனம் இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோவின் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது

இந்த திட்டங்கள் ரூ. 2,879 மற்றும் ரூ. 2,999 விலையில் கிடைக்கின்றன.

ஜியோ நிறுவனம் இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் ரூ. 2,879 மற்றும் ரூ. 2,999 விலையில் கிடைக்கின்றன.

ஜியோவின் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.

இதன்படி ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு  கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 730ஜிபி ஆகும். தினசரி எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.

மற்றொரு திட்டமான ரூ.2999-ல் தினம் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 912.5 ஜிபி ஆகும். எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :