reliance-jio
Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி நன்மையுடன் ஒரு அன்லிமிடெட் 5G நன்மையுடன் மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் போன்ற நன்மை பல வழங்குகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,629 ஆகும் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் பல நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.629 திட்டத்தில் வருகிறது இந்த திட்டத்தின் நமை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா ஆகியவை அடங்கும். இந்தத் திட்டம் 56 நாட்கள் சேவை வேலிடிட்டி வழங்குகிறது.
இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி சேவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. 5ஜி மற்றும் 56 நாட்கள் சேவை வேலிடிட்டியை வழங்கும் ஜியோவின் ஒரே திட்டம் இதுதான். இந்தத் திட்டத்துடன் பெரிய OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், மிகவும் மதிப்புமிக்க மற்றும் விலை உயர்ந்த ஜியோ AI ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை உங்களுக்குக் கிடைக்கும்,
இதையும் படிங்க ஒன் டைம் ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி இருக்கலாம் VI யின் சூப்பர் பிளான் 365 நாட்கள் நோ டென்ஷன்
ஆனால் இந்தியாவில் உள்ள ஜியோ கஸ்டமர்களுக்கு இது இலவசம். இதன் நன்மை என்னவென்றால், ரூ.35,100 மதிப்புள்ள ஜியோ AI ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்களுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல் கிடைக்கிறது. இதில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், பயனர் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜியோ திட்டத்தைக் கொண்டு தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.