வெறும் ரூ,200 யில் Jio சூப்பர் அதிரடி பிளான் டேட்டா, காலிங் போன்ற பல நன்மை
Relience Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் வரும் திட்டத்தை கொண்டுவதுள்ளது இந்த திட்டத்தில் காலிங் மற்றும் டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது, நீங்கள் ஒரு ஜியோ சிம்மைப் பயன்படுத்தி, இரண்டு வாரங்களுக்கு அதிக டேட்டா வழங்கும் ஒரு திட்டத்தை விரும்பினால், அந்நிறுவனத்தின் ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கலாம், மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி காலத்துடன் வருகிறது. இந்தத் திட்டம் கஸ்டமர்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது. ரோமிங்கின் போதும் காலிங் பலன்கள் தொடர்வதால், பயணம் செய்யும் கஸ்டமர்கள் கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய அவசியம் நீக்கப்படுகிறது.
தினசரி 2GB டேட்டா பலன்
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் டேட்டா பலன்கள்தான். ஜியோ தனது கஸ்டமர்களுக்கு தினமும் 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. 14 நாட்கள் முழு வேலிடிட்டி காலத்தில், பயனர்கள் மொத்தம் 28ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த டேட்டா, வீடியோக்களைப் பார்ப்பது, சோசியல் மீடியாக்கள் , ஆன்லைன் கிளாஸ் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வது போன்றவற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க கம்மி விலையில் மக்கள் மனதை கொள்ளையடித்த Airtel யின் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சூப்பர் திட்டம்
SMS மற்றும் ஆப்களுக்கு அக்சஸ் கிடைக்கும்
டேட்டா மற்றும் காலிங் வசதிகளுடன், இந்தத் திட்டத்தில் தினமும் 100 SMS-களையும் வழங்குகிறது. மேலும், கஸ்டமர்களுக்கு ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற டிஜிட்டல் சேவைகளுக்கான இலவச அக்சஸ் கிடைக்கிறது, இது கூடுதல் என்டர்டைன்மென்ட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குகிறது.
ஜியோ கஸ்டமர்கள் , நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வரம்பற்ற 5ஜி டேட்டாவின் பலனையும் பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
