BSNL யின் அதிரடி பிராட்பேண்ட் சலுகை ரூ. 349யில் அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL .தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகையை அறிவித்தது
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவிக்க இருக்கிறது. பிராட்பேண்ட் சேவையில் புதிதாக அறிவிக்கப்பட இருக்கும் சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் தினமும் 3 ஜி.பி. டேட்டா சுமார் 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது.
SurveyBSNL . அறிவித்திருக்கும் மூன்று சலுகைகளும் ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்றன. முன்னதாக BSNL .தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ஸ்டார் 300 பிராட்பேண்ட் சலுகையை அறிவித்தது. இந்த சலுகையில் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது
மூன்று புதிய சலுகைகளும் அந்தமான் மற்றும் நிகோபார் தவிர இந்தியா முழுக்க அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட இருக்கின்றன. ரூ. 349 மற்றும் ரூ. 399 பிராட்பேண்ட் சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும் நிலையில், ரூ. 499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
மூன்று சலுகைகளில் பயனர்கள் எதை தேர்வு செய்தாலும், 1 ஜி.பி. மெமரியுடன் ஒரு ஈமெயில் முகவரி இலவசமாக பெறலாம். புதிய சலுகைகள் BSNL அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை ஜூலை 1 ஆம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகைகளில் விலை குறைவாக கிடைக்கும் ரூ. 349 சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps வேகத்திற்கு மாற்றப்படும். டேட்டா மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுக்க BSNL .நெட்வொர்க்கில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது.
ரூ. 399 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையில் நாடு முழுக்க அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.
BSNL ரூ. 499 பிராட்பேண்ட் சலுகையில் 8Mbps வேகத்தில் தினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவை கடந்ததும் டேட்டா வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையிலும் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
