BSNL குறைந்த விலையில் 54 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் காலிங்,டேட்டா நன்மை

BSNL குறைந்த விலையில்  54 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் காலிங்,டேட்டா  நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி உடன் வரும் புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது அதாவது வெறும் ரூ,400க்கும் குறைந்த விலையில் அதிகபட்ச வேலிடிட்டி தனியார் டெலிகாம் நிறுவனங்களே தர முடியாத நிலையில் பிஎஸ்என்எல் மாசக கேதுகாடுகிறது இதனுடன் இதில் தினமும் 2GB டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் சிறப்பு நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ.347 ரீச்சார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் இந்த ரீசார்ஜ் திட்டத்தை 54 நாட்கள் வேலிடிட்டியாகும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர, இந்த திட்டத்தை நீங்கள் ரூ.347க்கு ரீச்சார்ஜ் செய்யலாம். BSNL- யின் இந்த திட்டத்திற்காக நிறுவனம் செய்த பதிவின்படி , BSNL-யின் இந்த ரீசார்ஜ் மூலம், நீங்கள் இப்போது உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிகம் பேசலாம். நீங்கள் இன்னும் அதிகமாக பிரவுசிங் செய்ய முடியும் . இது தவிர, குறைந்த விலையில் அதிகபட்ச பலன்கள் போன்றவற்றைப் பெறலாம்.

பிஎஸ்என்எல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 54 நாட்களுக்கு அன்லிமிடெட் காலின் பலன் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் உங்களுக்கு 2 ஜிபி அதிவேக இன்டர்நெட் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்ச டேட்டா வழங்குகிறது . இதன் பொருள் நீங்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை பெறலாம். திட்டத்தின் பிற நன்மைகளைப் பற்றி பேசினால், திட்டத்தில் உங்களுக்கு தினமும் 100 SMS வழங்கப்படுவதைக் காண்கிறோம். இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிகபட்ச நன்மைகளை வழங்குவதாகக் கூறுகிறது.

BSNL 4G சேவை

BSNL இந்தியா முழுதும் 75,000க்கும் அதிகமான 4G சைட்ஸ் ஜூன் 2025 நடப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும் இது ஒரு லட்சத்திற்க்கு அதிகமான 4G சைட்ஸ் கொண்டுவரப்படும்.

இந்தியாவில் தற்போது மிகவும் குறைந்த விலையில் டெலிகாம் சேவை வழங்குநராக பிஎஸ்என்எல் உள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒரே பிரச்சனை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 4ஜி கிடைக்காது என்பதும், அது மோசமான நெட்வொர்க் அனுபவத்தைக் குறிக்கலாம் என்பதும் ஆகும்.

இதையும் படினக BSNL யின் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தில் இந்த திட்டம் தான் பெஸ்ட் அது ஏன் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile