BSNL நஷ்டத்தை குறைக்க புதிய அறிவிப்பு.

BSNL  நஷ்டத்தை குறைக்க புதிய அறிவிப்பு.

பண பயன்களுடன் BSNL, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 80,000 பேர் பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 1½ லட்சம் பேர் பணியாற்றி வருகிற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் ஊழியர்களுக்கு பணப்பயன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இது மிகச்சிறப்பான விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும். இந்த திட்டம் அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும். இதையொட்டி ஊழியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியில் உள்ள 1½ லட்சம் ஊழியர்களில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் விருப்ப ஓய்வுக்கு தகுதி பெறுகிறார்கள்.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் தலைவர் பி.கே. புர்வார், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

50 வயதை அடைந்தவர்கள், அதற்கு கூடுதலான வயதினர் விருப்ப ஓய்வு வரம்புக்குள் வருகிறார்கள். 80 ஆயிரம் ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி விருப்ப ஓய்வு பெற முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நிறுவன ஊழியர்களுக்கான சம்பள செலவு ரூ.7000 கோடி குறையும் என அவர் கூறினார்.

விருப்ப ஓய்வு பெற விரும்புகிற BSNL. ஊழியர்களுக்கான பண பயன்கள்:

– பணி நிறைவு செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா 35 நாட்கள் ஊதியம் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

– பணி ஓய்வு காலம் வரையிலான எஞ்சிய காலத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 25 நாள் ஊதியம் அளிக்கப்படும்.

இதே போன்று எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கும் விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டமும் அடுத்த மாதம் 3 ஆம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.

நஷ்டத்தில் இயங்கி வருகிறது  BSNL.. மற்றும் MTNL. நிறுவனங்களை இணைத்து புத்துயிரூட்டவும், அவற்றின் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தவும் ரூ.69 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசு கடந்த மாதம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo