BSNL அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது…!

HIGHLIGHTS

புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

BSNL அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது…!

BSNL . நிறுவன ஃபைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட் சலுகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள, அந்த வகையில் புதிய சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதுகுறித்து டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படிBSNL நிறுவனம் கூடுதல் டேட்டா மட்டுமின்றி டவுன்லோடு வேகத்தையும் அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளின் விலை ரூ.3,999 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ.16,999 வரை நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/7f1784a4bd5c8951f44875e8fe16e585c6f5fe55.jpeg

செப்டம்பர் 1-ம் தேதி துவங்கி,BSNL. பயனர்கள் பைபர் டு தி ஹோம் பிராட்பேன்ட்: ரூ.3,999, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகைகளை செலக்ட் செய்வோர் கூடுதல் வேகம் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மாதாந்திர டேட்டா பெற முடியும்.

ரூ.3,999 சலுகையில் டவுன்லோடு வேகம் 60Mbps ஆகவும், மாதாந்திர டேட்டா அளவு 750 ஜிபியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சலுகையில் 50Mbps டேட்டா டவுன்லோடு வேகம் மற்றும் அதிகபட்சம் 500 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. ரூ.5,999 சலுகையில் தற்சமயம் 70Mbps டேட்டா வேகம் மற்றும் அதிகபட்சம் 1250 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் டேட்டா வேகம் 6Mbps ஆக குறைக்கப்படுகிறது.

மாற்றப்பட்ட ரூ.9,999 விலையில் 100Mbps வேகம் மற்றும் 2250 ஜிபி டேட்டாவும், நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு நிறைவுற்றதும் டேட்டா வேகம் 8Mbps ஆக குறைக்கப்படும். ரூ.16,999 விலையில் கிடைக்கும் சலுகையில் 100Mbps டவுன்லோடு வேகத்தில் அதிகபட்சம் 3500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதே சலுகையில் முன்னதாக 100Mbps வேகத்தில் 3000 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile