BSNL நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ செயலியை புது அம்சங்களுடன் அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மை பிஎஸ்என்எல் செயலியில் மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
அப்டேட் ஆன புது செயலியில் ரிவார்ட்ஸ், 4ஜி ஹாட்ஸ்பாட், ஸ்பெஷல் ஆஃபர் மற்றும் ஃபேன்சி நம்பர் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதியும் புதிய செயலியில் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய பலன்களை பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ், மை பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் வைபை, பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ் ணற்றும் மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
மேலும் ஒன் க்ளிக் பில் பே ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பில் கட்டணம் செலுத்துவது, தங்களின் சலுகையை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.
– இதற்கு முதலில் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
– பின் பெயர், மொபைல், மின்னஞ்சல், வாட்டார மற்றும் பயனர் குறியீடு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு பின் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
– இனி லாக்-இன் செய்து மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
– அடுத்து ஃபேன்சி நம்பர், ஒன் க்ளிக், பே பில்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile