அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு புதிய ரூ,202 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இந்த திட்டத்தில் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் போன்ற நன்மை வழங்குகிறது. ரூ,202 யில் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டமே இருப்பதிலே குறைந்த விலை திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
BSNL-யின் இந்த திட்டத்தின் விலை ரூ.202 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டமாகும் இதில் 300 நிமிட வொயிஸ் காலிங் மற்றும் 5GB அதிவேக டேட்டா ஆகியவை அடங்கும். FUP (ஸ்டேடர்ட் பயன்பாட்டுக் பாலிசி ) டேட்டா பயன்படுத்தப்பட்ட பிறகு, ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. இந்தத் திட்டத்தில் 100 SMS மற்றும் இன்சூரன்ஸ் நன்மையும் அடங்கும். வொயிஸ் காலிங், டேட்டா மற்றும் SMS ஆகியவற்றில் நன்மையுடன் இந்த திட்டத்தின் 32 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டமானது குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும். இந்த வொயிஸ் வவுச்சர் (voice voucher) இப்போது BSNL வெப்சைட் மற்றும் BSNL Self Care ஆப் ஆகியவற்றில் கிடைக்கிறது.
Recharge with BSNL and enjoy more than just connectivity! Get added protection with ₹1 lakh Personal Accident Cover and ₹10,000 Cyber Insurance Cover with the ₹202 STV plan. Stay connected, stay secure, stay BSNL! For more information: 1800 11 8485 #BSNLIndia #StayConnected #InternetForEveryone #DigitalLife #IndiaOnline #BSNLServices #SmartIndia #EverydayConnectivity #BSNLinsurance #oicl #benefits #hamarabsnl @oicl_csd @CMDBSNL @robertravi21
— BSNL India (@BSNLCorporate) October 12, 2026
இதை தவிர நீங்கள் இன்னும் அதிக டேட்டா விரும்பினால் BSNL யின் ரூ,247 யில் வரும் திட்டம் பெஸ்ட்டானது அதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க Jio வெறும் ரூ,500க்கும் குறைந்த ஒரே ஒரு ரீச்சார்ஜில் மொத்த குடும்பமே ஜாலியா இருக்கலாம்
BSNL ரூ. 247 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும் இந்த திட்டத்தின் 30 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 50GB அதிவேக 4G டேட்டா உள்ளது. FUP டேட்டா தீர்ந்த பிறகு ஸ்பீட் 40 Kbps ஆகக் குறைகிறது. மேலும், இந்தத் திட்டத்துடன் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு தினமும் 100 SMS-களும் வழங்கப்படுகின்றன. கஸ்டமர்களின் ப்ரைம் அக்கவுண்டில் ரூ. 10 மதிப்புள்ள டாக் வேல்யூவும் வழங்கப்படுகிறது. இது நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கும் ஒரு STV (சிறப்பு கட்டண வவுச்சர்) ஆகும். இருப்பினும், இது ஒரு புதிய திட்டம் அல்ல. இது டெலிகாம் நிறுவனத்தின் சலுகைகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.