Apple இன்று அதன் HomeView மற்றும் HomePod mini 2 அறிமுகம் செய்தது. இதனுடன் HomeView யில் மிக சிறந்த 7-இன்ச் லிக்யூட் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டுள்ளது , இதனுடன் இந்த டச் ஸ்க்ரீனில் சிறிய காம்பேக்ட் ஸ்பீக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் இதில் Siri AI வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற அம்சம் கொண்டுள்ளது . குபெர்டினோவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனம், புதிய Apple TV 4K-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. HomePod mini 2-இல் 360-டிகிரி சவுண்ட், ‘Sound Glow’ சவுண்ட் எபக்ட்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட ஸ்மார்ட் ஹோம் அம்சங்களுடன் புதிய கலர்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Apple HomeView 7-இன்ச் லிக்யூட் ரெட்டின டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதனுடன் இதில் ட்ரூ டோன் டெக்னாலஜி மற்றும் ஆட்டோமேட்டிக் ப்ரைட்னாஸ் அட்ஜஸ்ட்மென்ட் வழங்குகிறது, யூஷர் இந்தச் டிவைஸை மேசை மீதோ அல்லது சுவரிலோ எளிதாகப் பொருத்திக்கொள்ளலாம். ‘HomeView’ சாதனமானது சில்வர், ஸ்டார்லைட், ரோஸ் பிங்க் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய கலரில் கிடைக்கிறது; அதேவேளையில், சுவரில் பொருத்தக்கூடிய மாடல் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது.
HomeView ஆறு பேர் வரை அடையாளம் கண்டு, ஒவ்வொரு பயனருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட ஹோம் ஸ்க்ரீனை வழங்குகிறது. இது ஃபேஸ்டைம் கால்கள் , மெசேஜஸ், ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் பாட்காஸ்ட்ஸ், ஆப்பிள் டிவி மற்றும் இணக்கமான மூன்றாம் தரப்பு ஆப்களை சப்பரத் செய்கிறது . பயனர்கள் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம், கேமரா ரேக்கர்டிங்க்களை சரிபார்க்கலாம், லைட்கள் மற்றும் தெர்மோஸ்டாட்களைச் சரிசெய்யலாம், மேலும் இணைக்கப்பட்ட பிற அக்சஸ்ரிஸ்களையும் மேனேஜ் செய்யலாம் .
இந்தச் சாதனம், தற்போது பீட்டா சோதனையில் உள்ள Siri AI தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், புதிய இசையைக் கண்டறிய உதவவும், மேலும் இணைக்கப்பட்டுள்ள Apple Intelligence வசதி கொண்ட iPhone அல்லது iPad-இலிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி மிகவும் பொருத்தமான பதில்களை வழங்கவும் வல்லது. இதை அமைப்பதற்கு, இணக்கமான ஒரு iPhone அல்லது iPad தேவைப்படுகிறது.
Apple HomePod mini 2, ஆப்பிளின் S10 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது நிகழ்நேரத்தில் ஒலியை மேம்படுத்த கணக்கீட்டு ஆடியோவைப் பயன்படுத்துவதாகவும், 360-டிகிரி ஆடியோவை ஆதரிப்பதாகவும் ஆப்பிள் கூறுகிறது. இதன் விளைவாக, இதைத் தனியாகவோ, ஸ்டீரியோ இணையாகவோ, அல்லது பல அறைகள் கொண்ட ஆடியோ சித்தத்தில் ஒரு பகுதியாகவோ பயன்படுத்தலாம். பயனர்கள் நான்கு ஹோம்பாட் மினி 2 ஸ்பீக்கர்களை புதிய ஆப்பிள் டிவி 4K (4வது தலைமுறை) உடன் இணைத்து ஒரு சரவுண்ட் சவுண்ட் அமைப்பை உருவாக்கலாம்.
Siri AI இயல்பாகவே கிடைக்காது என்றாலும், மேலும் இயல்பான உரையாடல்கள், தனிப்பயனாக்கப்பட்ட உதவி மற்றும் சிறந்த இசைத் தேடல் ஆகியவற்றுக்காக, எதிர்கால மென்பொருள் புதுப்பிப்பு மூலம் அது வழங்கப்படும் என்று ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது. HomePod mini 2 ஒரு ஸ்மார்ட் ஹோம் ஹப்பாகவும் செயல்பட முடியும். இது, பயனர்கள் இணக்கமான அக்சசரிஸ் டூல்ககள் கட்டுப்படுத்தவும், ஆட்டோமேஷன் மற்றும் காட்சிகளை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது.
வீடியோ டோர் பெல் மற்றும் கேமராக்கள் உள்ளிட்ட உடன் சேர்ந்து ஆப்பிள் ஹோம் கலெக்ஷன் அக்சஸ்ரிஸ் உடன் ஹோம்பாட் மினி 2 செயல்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
இதையும் படிங்க நிம்மதி பெரு மூச்சி விட்டுகொங்க UPI ட்ரேன்ஸ்செக்ஷன் MDR கீழ் ரூ, 2,000 கட்டணம் இப்போதைக்கு வசூலிக்கப்படாது
இந்தியாவில் Apple HomeView-வின் விலை ₹39,900-லிருந்து தொடங்குகிறது; மேலும் நீங்கள் இதை மாதந்திரம் EMI கீழ் ரூ,3,620க்கு வாங்கலாம். மற்றும் இதன் விற்பனை நவம்பர் 13 அன்று நடைபெறும்.
HomePod mini 2-இன் விலை ரூ. 18,900 ஆகும்; இது அக்டோபர் 30 முதல் கிடைக்கும்.